ஞாயிறு, 22 டிசம்பர், 2013

பொது இடத்தில் ‘நிர்வாணத் திருமணம்’... சிறைக்குள் தேனிலவு (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவில் பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொதுவாக பொது இடங்களில் நிர்வாணமாக நடப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக நிர்வாண கிளப் என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதன் உறுப்பினர்களான காதல் ஜோடி ஒன்று பொதுஇடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த பார் நடனப் பெண் ஸிப்சி தவுப். நிர்வாண கிளப்பில் உறுப்பினராக சேர்ந்த ஸிப்சி, அங்கிருந்த மற்றொரு உறுப்பினர் ஜேம்ஸ் ஸ்மித்தை காதலிக்கத் தொடங்கினார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தங்களது சங்க கொள்கைகளை பிரசாரம் செய்யும் வகையில் பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்தனர். இதற்கு சங்க உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து, கடந்த வெள்ளியன்று இருவரும் வழக்கமான திருமண உடையுடனும், தங்களது சங்க உறுப்பினர்களுடனும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபலமான சிட்டி ஹாலுக்கு சென்றனர். அங்கு திடீரென இருவரும் ஆடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக நின்றனர். மணமக்களைத் தொடர்ந்து சங்க உறுப்பினர்களும் நிர்வாணமாயினர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் இவர்களின் செய்கைகளால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமானோர் குவிந்தனர். தகவல் அறிந்து டிவி கேமராமேன்களும் குவிந்தனர்.

இருவரும் வழக்கமான திருமண சடங்கை பொது இடத்தில் நிர்வாணமாக நடத்தி விட்டு ஒருவரை யொருவர் தழுவி முத்தமிட்டனர். பின்னர் இருவரும் கட்டி அணைத்து நடனமாட தொடங்கினர். நிர்வாண கிளப் உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து கையில் அட்டைகளுடன் கோஷமிட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் மிக பெரிய சால்வையால் மூடினர். பொது இடத்தில் நிர்வாணமாக வந்து இடையூறு செய்த காரணத்துக்காக இருவரையும் கைது செய்து அழைத்து சென்றனர் போலீசார்.

அதனைத் தொடர்ந்து தற்போது சிறையில் உள்ளனர் புதுமண தம்பதி. எல்லோரும் திருமணம் முடிந்து தேனிலவுக்கு வெளியூருக்குச் செல்வது போல், இவர்கள் தற்போது சிறையில் தேனிலவு கொண்டாடி வருகின்றனர் என்கின்றனர் அவர்களது நண்பர்கள்.











Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல