ஞாயிறு, 29 டிசம்பர், 2013

83 வயது மாமியாரை பட்டினி போட்டு சித்திரவதை செய்த மருமகள் பொலிஸாரால் கைது!

இரண்டு மாடி ஆடம்பர வீட்டின் பின்புறம் குடிசை ஒன்றில் பசியால் வாடிய மாமியாரை பொலிஸார் மீட்டனர்.

அம்மாவா, நானா? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க” என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் இன்று எக்கச்சக்கம் என்கின்றனர் 'கவுன்சிலிங்” வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு விதமன அழுத்தத்தைக் அவர்களுக்கு கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது.



எனவே மாமியார் –மருமகள் பிரச்சினை ஏதோ இன்ற நேற்று ஏற்பட்ட ஒன்று என்று மட்டும் நினைக்கவேண்டாம். மாமியார்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் எல்லா வீடுகளிலும் பரவியிருக்கும் ஒரு சர்வதேசப் பிரச்சினை இது!

அவரது ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தங்கள் கணவன்மார் அம்மாப் பிள்ளையாக இருக்கிறார்கள் என குறைபட்டுக் கொண்டனர். அதே சமயம், மூன்றில் இரண்டு பங்கு மாமியார்களோ, தங்கள் மகன் தங்களை தனிமைப்படுத்துகிறான், பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான் என வருந்துகின்றனர். எனவே இது ஒரு விதத்தில் அக்கரைப் பச்சை அனுபவம் தான். ஒவ்வொருவரும் அடுத்தவர் பார்வையில் பார்க்க ஆரம்பிக்கும் போது பல விஷயங்கள் எளிதில் புலனாகும். சிக்கல்கள் தீரத்துவங்கும். EVERY HOME HAS A SKELETON IN ITS CUPBOARD என்றொரு பழமொழி உண்டு ஆங்கிலத்தில்..வீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்கள் தமிழில் அழகாய். ஆம் பிரச்சினைகள் இல்லாத குடும்பங்களும் இல்லை, மனிதனும் இல்லை..ஆனால் நம் சமுகத்தில் மனிதனால் கடைசி வரை தீர்க்கவே முடியாத இரண்டு பிரச்சினைகள் உண்டென்றால் அது கடன் பிரச்சினையும் ,மாமியார் – -மருமகள் பிரச்சினையும்தான் என்று வாதிடுகின்றனர் சில ஆய்வாளர்கள் . .

அந்தக் காலத்தில் அதாவது, நிறைய கல்வியறிவில்லாக் காலத்தில் மட்டுமல்ல, வளர்ந்துவரும் இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் தீர்க்கமுடியாத ஒரே பிரச்சினை இந்த மாமியார்- –மருமகள் பிரச்சினையாக நிலவி வருவது தான் வேடிக்கை.

பிலியந்தலை போக்குந்தர பகுதியில் 83 வயதான மாமியார் ஒருவரை (கணவரின் தாயாரை) பல நாட்களாக பட்டினி போட்டது மட்டுமல்லாமல் அவரை அடித்துத்துன்புறுத்தி சித்திரை வதை செய்துள்ளார் மருமகள் ஒருவர்.

ஏ. ஜீ. லீலாவதி எனும் இந்த வயோதிப பெண்ணின் மகன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி . இவரது மனைவியும் நன்கு படித்தவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இரண்டு அடுக்கு மாடி வீடு , கார் என ஆடம்பரமாக இவர்கள் வாழ்ந்து வந்த போதிலும் இந்த வயோதிபப் பெண்ணுக்கு அதாவது தாயாருக்கு வீட்டின் பின்புறம் சிறிய குடிசை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த குடிசையை விட்டு வெளியே வர இவர் அனுமதிக்கப்படுவதில்லை. ஐயோ என்னை அடிக்க வேண்டாம் என தினமும் இந்த வீட்டிலிருந்து சத்தம் வருவதாக அயலவர்கள் தெரிவித்த முறைப்பாட்டை அடுத்து பிலியந்தலை பொலிஸார் இந்த அடுக்கு மாடி வீட்டை முற்றுகையிட்ட போது வீட்டின் பின்புறம் இருந்த குடிசையில் இந்த வயோதிப் பெண் பசியால் துவண்டு போய் இருந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டார். இவருக்கு குடிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் போத்தல் கூட சுகாதாரமற்ற நிலையில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். மருமகள் தினமும் காரணம் இன்றி தன்னை அடிப்பதாகவும் சாப்பிட எதுவுமே கொடுப்பதில்லை எனவும், அவர்கள் வெளியே சென்ற பின்னர் மதிலுக்கு மேலாக இரகசியமாக அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் தனக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பதாகவும், சில நாட்களில் மருமகளுக்கு பயந்து அதுவும் அவர்கள் கொடுப்பதில்லை எனவும் அந்த வயோதிப பெண்மணி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் மருமகள் தன்னை கல்லால் அடித்துக் காயப்படுத்தியாகவும் அவர் தனது காயத்தை பொலிஸாரிடம் காட்டியுள்ளார் .

52 வயதான மருமகள் கெஸ்பேவ நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளார். இவ்வளவும் நடந்திருக்கிறது. அதுவும் ஒரு நாள் இரு நாள் அல்ல.. நீண்ட காலமாக அப்படியாயின் பெற்ற மகன் எதையும் கண்டு கொள்ளவில்லையா என்று தானே சிந்திக்கிறீர்கள் .. மாமியார் –மருமகள் எனும் இருவரின் சண்டையெனும் தீயில் நடுவில் மாட்டிக்கொண்டு கருகுவது பெரும்பாலும் மகன்மார்கள் தான்

இதில் இவர் யார் பக்கம் பேசமுடியும்..யாரை விடுவது,யாரை விட்டுக்கொடுப்பது என்று பேசாமல் இருந்தாரோ என்னவோ..?


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல