ஞாயிறு, 29 டிசம்பர், 2013

மற்றுமொரு ஆயுதப் போர் ஆரம்பமா?

விடு­தலைப் புலிகள் போன்­ற­தொரு இயக்­கத்தை உரு­வாக்கும் முயற்­சி­க ளில் ஒரு தரப்பு இறங்­கி­யுள்­ள­தாக அண்­மைக்­கா­ல­மாக பர­ப­ரப்­பான தக­வல்கள் வெளி­யாகி வரு­கின்­றன.



விடு­தலைப் புலி­களின் திரு­கோ­ண­ மலை மாவட்ட கட்­டளைத் தள­ப­தி­யாக இருந்த கேர்ணல் பதுமன் தலை­மையில், இந்தப் புதிய ஆயு­தக்­கு­ழு வை உரு­வாக்க திட்­ட­மிட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கின.

போரின் இறு­திக்­கட்­டத்தில் படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்த கேர்ணல் பது மன், மீது வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்ட போதிலும், அவர் மீதான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு போதிய ஆதா­ரங்­களை அர­ச­ த­ரப்பு சமர்ப்­பிக்கத் தவ­றி­யதால், திரு­கோ­ண­மலை மேல்­ நீ­தி­மன்­றத்தால் அவர் அண்­மையில் விடு­விக்­கப்­பட் டார். புலி­களின் மூத்த தள­ப­திகள் பலர், சர­ண­டைந்த பின்னர் காணா­மற்­போன போதிலும், கேர்ணல் பது­ம­னுக்கு அத்­த­கைய நிலை ஏற்­ப­ட­வில்லை.

காரணம், விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் கருணா ஏற்­ப­டுத்­திய பிளவை அடுத்து, கேர்ணல் பது­மனும் திரு­கோ ­ண­ம­லையில் இருந்து வன்­னிக்கு அழைக்­கப்­பட்டு, அவ­ரிடம் இருந்து பொறுப்­புகள் பறிக்­கப்­பட்ட நிலையில் தான் இருந்தார்.

விடு­தலைப் புலி­களின் தலை­மை யால் தண்­டிக்­கப்­பட்ட ஒரு­வ­ராக இருந்­ததால் தான், கேர்ணல் பதுமன் போரின் இறு­திக்­கட்­டத்தில் சர­ண­டைந்த பின்னர், இல­கு­வாக வெளி­வர முடிந்­துள்­ளது.

இவர் வெளியே விடப்­பட்­டதன் பின்­னணி குறித்து, ஊட­கங்­களில் பல் ­வேறு தக­வல்கள் வெளி­யா­கிய போதி லும், அவை­யெல்லாம், உண்மை என்­ப­தற்கு உத்­த­ர­வா­த­மில்லை.

கேர்ணல் பதுமன் போன்­ற­தொரு புலி­களின் முக்­கிய தள­ப­தியை, சட்­ட­ரீ­தி­யாக தண்­டிக்க விரும்­பி­யி­ருந்தால், அது அர­சாங்­கத்­துக்குப் பெரிய காரி­ய­மாக இருந்­தி­ருக்­காது.

ஆனால் அவ்­வாறு அர­சாங்கம் செய்­ய­வில்லை.

இதுதான், பல்­வேறு ஊட­கங்­க­ளிலும் கேர்ணல் பது­மனின் விடு­தலை குறித்த சந்­தே­கங்­களும் ஊகங்­ களும் எழுந்­த­தற்குக் காரணம். இந்த நிலையில்தான், அண்­மையில், பதுமன் தலை­மையில் புலி­களை உரு­ வாக்க இர­க­சியத் திட்டம் தீட்­டி­யுள்­ள­தா­கவும், இந்த ஆயு­தக்­கு­ழுவைப் பயன்­ப­டுத்தி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­தர்­களைக் கொலை செய்ய சூழ்ச்­சிகள் நடப்­ப­தா­கவும் தக­வல்கள் பர­வின.

இத்­த­கைய தக­வல்கள் எதுவும், எந்­த­ள­வுக்கு உண்­மை­யா­னவை என்று உறு­திப்­ப­டுத்­தத்­தக்­க­வை­யல்ல.

ஆனால், அர­சியல் மட்­டத்தில் இது ஒரு சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

வட மாகாண முதல்வர் விக்­னேஸ்­வரன் இது­கு­றித்து சில அர­சியல் மேடை­க­ளிலும் பொது மேடை­க­ளிலும் சூச­க­மாக சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அதா­வது, வடக்கிலிருந்து படை­யி னர் வெளி­யேற வேண்டும் என்று கூறு­வதால், தன்­னையும் சம்­பந்தன் போன்­றோ­ரையும் கொல்ல வேண்டும் என்று படை­யினர் நினைக்கக் கூடும் என்றும், அவ்­வாறு செய்தால், அந்த உண்­மைகள் ஜெனீ­வாவில் நர்த்­த­ன­மாடும் என்றும் அவர் எச்­ச­ரித்தும் இருந்தார்.

விடு­தலைப் புலிகள் போன்­ற­தொரு ஆயு­தக்­குழு உரு­வாக்­கப்­ப­டுமா? அதற்குப் பதுமன் தலைமை தாங்­கு­ வாரா? அப்­ப­டி­யான ஆயு­தக்­கு­ழுக் கள் தமிழ் அர­சியல் தலை­வர்­களை கொல்லும் முயற்­சியில் இறங்­குமா? என்ற கேள்­விகள் இப்­போது எழு­கின்­றன. பொது­வா­கவே, அர­சியல் ரீதி­யாக எதிர்­கொள்ள முடி­யாத தலை­வர்­களை மர்­ம­மான முறையில் போட்டுத் தள்ளும் தந்­தி­ரோ­பாயம், வளர்­முக நாடு­களில் நெடுங்­கா­ல­மாக இருக்­கின்ற வழக்­கமே.

அதுவும் இரா­ணுவ மேலா­திக்கம் நிறைந்த நாடு­களில் இத்­த­கைய அர­சியல் படு­கொ­லைகள் சர்வ சாதா­ர ணம். பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகள் இத்­த­கைய அர­சியல் படு­கொ­லை­களை சந்­தித்­துள்­ளன.

இந்த உத்தி தற்­போது இலங்­கைக்கு ஒத்து வருமா? என்­பது தான் முக்­கி­ய­மான வினா.

ஏனென்றால், விடு­தலைப் புலிகள் என்ற பலம் வாய்ந்த இயக்­கத்­தையே வேருடன் அழித்த நாடு இலங்கை.

2009 மே 19 ஆம் திகதி போர் முடி­வுக்கு வந்த பின்னர், அத­னுடன் தொடர்­பு­டைய எந்­த­வொரு சிறிய ஆயுத மோதல் சம்­ப­வமும் இலங்­கை யில் நிக­ழ­வில்லை.

கிட்­டத்­தட்ட புலி­களின் தலை­மை யை அழித்­ததன் மூலம் அர­சாங்கம், அந்த இயக்­கத்தின் கீழ்­நிலை கட்­ட­மைப்­புகள் அனைத்­தை­யுமே செய­லற்­ற­தாக்கி விட்­டது.

இதனால், கீழ் நிலையில் இருந்த கட்­ட­மைப்­பு­க­ளுக்கும், இர­க­சிய அமைப்­பு­க­ளுக்கும் கட்­ட­ளை­யிட எவ­ரு­மில்­லாமல் போனதால், அவை அனைத்தும், ஆயுதப் போராட்­டத்தில் இருந்து அடி­யோடு ஒதுக்­கப்­பட்டு விட்­டன.

திடீ­ரென ஓர் ஆயுதக் குழு தோற்றம் பெற்று, தமிழ் அர­சியல் தலை­வர்­களை குறி­வைக்கத் தொடங்­கினால், அது அர­சாங்­கத்தை நோக்­கியே கேள்­வி­க­ளையே எழுப்ப வைக்கும்.

ஏனென்றால், புலி­களை முற்­றாக அழித்து விட்­ட­தாக, கூறி­விட்டு எப்­படி திடீ­ரென அவர்கள் முளைத்­தனர் என்று உலக நாடுகள் கேள்வி எழுப் பும்.

தீவி­ர­வா­தத்தை முற்­றாக அழித்த உலகின் முதல் நாடு என்ற பெயரை பெற்று விடு­வ­தற்­காக முயற்­சிக்கு அர­சாங்கம், இத்­த­கை­ய­தொரு ஆயு­தக்­குழு மீளத் தோற்றம் பெற்றால் அத்­த ­கைய பெயர் தமக்கு கிடைக்­காது என்­ப­தையும் மறந்து விடாது.

ஓர் ஆயு­தக்­கு­ழுவை அநா­ம­தே­ய­மாகத் தோற்­று­வித்து, தமிழ் அர­சியல் தலை­மை­களைத் தீர்த்துக் கட்­டு­வது என்­பது எவ­ராலும் இய­லாத காரி­ய­மாக இருக்­காது.ஆனால், அது எத்­த­கைய விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்­பதை சிந்­திக் ­காமல், அத்­த­கைய முடிவை எந்­த­வொரு தரப்பும் எடுக்­காது.

ஏற்­க­னவே அர­சாங்கம் மனி­த­உ­ரிமை மீறல்கள் குறித்த கடு­மை­யான அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது.

பொறுப்­புக்­கூறல் என்­பது அர­சாங்­கத்­தினால் தட்­டிக்­க­ழிக்க முடி­யாத விவ­கா­ர­மாக மாறி­விட்­டது.

இத்­த­கைய நிலையில், இன்னும் சர்ச்­சை­களில் சிக்கிக் கொள்ள அர­சாங்கம் விரும்­பாது.

ஏனெனில், இலங்­கையில் குறிப்­பாக வடக்கு, கிழக்கில் எத்­த­கைய ஆயுத வன்­மு­றைகள் இடம்­பெற்­றாலும், அதனை சர்­வ­தேச சமூகம் இல­கு­வாக எடுத்துக் கொள்­ளாது.

அதனை அர­சாங்­கத்தின் செயற்­பா­டா­கவே கரு­து­வ­துடன் நிற்­காது, அதன் அடி முடியைத் தேடும் முயற்­சி­க­ளிலும் சர்­வ­தேச சமூகம் இறங்கும்.

இலங்­கையில் தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­படாவிட்டால், மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக் கக் கூடும் என்று அமெ­ரிக்கா எச்­ச­ரித்­தி­ருந்­தது என்று பலரும் கேள்வி எழுப்­பலாம்.

அது உண்­மையே, ஆனால், அதற்­கான சூழல் இப்­போது வடக்கு, கிழக்கில் இல்லை. அத்­த­கைய நிலை ஏற்­பட விடவும் மாட்டோம் என்று அர­சாங்கம் பதில் கொடுத்­த­தையும் மறக்க முடி­யாது.

எனவே, ஆயு­தக்­ கு­ழு­வொன்றை உரு­வாக்கி வடக்கு, கிழக்கில் தமிழ் அர­சியல் தலை­மை­களை தீர்த்துக் கட்டும் முயற்­சி­களை எதிர்­பார்க்க முடி­யாது.

ஏனென்றால், புத்­தி­சா­லித்­த­ன­மான அரசு ஒன்று இத்­த­கைய முட்­டாள்­த­ன­மான காரி­யத்தை மேற்கொள்ளாது.

புலிகளை அழித்த விடயத்தில், தம்மை புத்திசாலித்தனமுள்ள அரசாங் கம் என்று நிரூபித்த இலங்கை அரசாங் கம், இப்படியொரு காரியத்தை செய்ய முனைந்தால், முட்டாள் பட்டத்தை தான் கேட்க நேரிடும்.

ஆனால், புதிய ஆயுதக் குழு வொன்றை அரசாங்கம் உருவாக்க முனை வதான செய்திகள் புரளியை யோ, பரபரப்பையோ ஏற்படுத்தும் ஒன்றாகவே இருக்கலாம்.

சர்வதேச, அரசியல் சூழல், உள் நாட்டு அரசியல் சூழல் எல்லாவற் றையும் புறந்தள்ளி விட்டுத்தான் இத் தகையதொரு குழுவை உருவாக்க முடியும். அவ்வாறு செய்வது சிரம மான காரியமில்லை.

ஆனால், அதன் விளைவுகள் மிகப் பெரியளவில் தாக்கத்தையும் மாற்றங் களையும் ஏற்படுத்தும் ஒன்றாக இருக் கும் என்பதில் சந்தேகமில்லை.

- சுபத்ரா
 வீரகேசரி
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல