கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். இந்தக் கதையை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. அன்றைய சூடானிய தேசத்தில் இருந்தவர்களால் கூடி வாழ முடியவில்லை. வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பிரச்சினைகள் நீடித்தன. கூடி வாழ்வதை விட தனித்து வாழ்ந்தால் தான் நல்லதென வடக்கும், தெற்கும் தீர்மானித்தன. கூடி வாழ்வதால் கிடைக்கும் நன்மையை விட தனித்தனியாக வாழ்வதால் கிடைக்கும் அனுகூலங்கள் அதிகமென உலக நாடுகள் கருதின.
இதன் காரணமாக சர்வதேச சமூகத்தின் துணையுடன் சூடான் என்ற தேசத்தில் இருந்து தென்சூடான் என்ற புதிய நாடு உருவானது. வடக்கிற்கு எதிராக தெற்கு முன்னெடுத்த ஆயுதப் போராட்டம், சர்வதேச மத்தியஸ்தத்துடனான சமரசப் பேச்சுவார்த்தை, அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள், தென்சூடான் தனியாகப் பிரிந்து செல்வதைத் தீர்மானிக்கக்கூடிய கருத்துக் கணிப்பு என்ற படிமுறைகளுக்கு அமைய தென்சூடான் தனிநாடாக உருவாகும் வரை சகல விடயங்களும் சரியாகத் தான் நடந்தன.
இன்று தென்சூடான் சின்னாபின்னமடைந்து இருக்கிறது. அங்கு இனநெருக்கடி தலைவிரித்தாடுகிறது. சிவில் யுத்தம் பற்றி அச்சம் மேலோங்கியிருக்கிறது. ஒரு வாரத்திற்கு மேலாக நீடிக்கும் வன்முறைகளில் ஆயிரம் பேராவது கொல்லப்பட்டிருக்கக் கூடுமென சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன. ஒரு இலட்சத்திற்கு மேலானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா. தகவல்கள் கூறுகின்றன. இடம்பெயர்ந்த மக்கள் உயிருக்கு அஞ்சி ஐ.நா. அலுவலக வளாகத்தில் தஞ்சம் கோரிய சமயத்தில், அந்த வளாகமும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு நகரில் 34 சடலங்களுடன் கூடிய பாரிய மனிதப் புதைக்குழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு புறத்தில் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சமரச முயற்சிகள். கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் தென்சூடானின் தலைநகருக்குச் சென்று திரும்பியிருக்கிறார்கள். கிழக்கு ஆபிரிக்க நாடுகள் கென்யத் தலைநகரில் கூடி பிரச்சினையைத் தீர்ப்பது பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தென்சூடானில் உள்ள தமது பிரஜைகளைப் பாதுகாப்பாக திருப்பி அழைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
தென்சூடானில் நிலைநாட்டப்பட்டுள்ள அமைதி காக்கும் படைவீரர்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அங்கு 12,500 படைவீரர்கள் நிலைநிறுத்தப்பட உள்ளனர். அதன் பிரகாரம், மற்றொரு படையணி தென்சூடானை அடைந்திருக்கிறது.
சமாதான முயற்சிகள் பற்றி சண்டையிடும் தரப்புக்களில் இருந்து மாறுபட்ட கருத்துக்கள். ஜனாதிபதி சல்வா கீர் நிபந்தனையுடன் கூடிய போர் நிறுத்தத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். முறையான பேச்சுவார்த்தைகள் இன்றி ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுக்க முடியாதென முன்னாள் துணை ஜனாபதிபதி ரீக் மாச்சார் குறிப்பிட்டுள்ளார். இந்த முரண்பாடு தென்சூடானில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகள் மீது சந்தேகத்தின் சாயலைப் படிய வைத்துள்ளது.
உலகின் இளைய தேசத்திற்கு ஏனிந்த கதி? இதற்கு இரண்டு விடைகள் சொல்லப்படுகின்றன. சர்வதேச சமூகம் சொல்லும் முதலாவது விடையை ஆராய்ந்தால், இது ஜனாதிபதி சல்வா கீருக்கும், முன்னாள் துணை ஜனாதிபதி ரீக் மாச்சாருக்கும் இடையிலான அதிகாரப் போராட்டத்தின் விளைவு என்பதாக இருக்கும். தென்சூடானின் விடுதலைப் போராட்டத்தில் அக்கறை கொண்டவர்கள் சொல்வதை இரண்டாவது விடையாகக் கருதலாம்.
தென்சூடானின் சமூகக் கட்டமைப்பை சரியாக புரிந்து கொள்ளாமல் சர்வதேச சமூகம் வலிந்து திணித்த பொருத்தமற்ற தீர்வுத் திட்டம் பிரச்சினைகளின் மூலகாரணம் என்பது இரண்டாவது விடையாகும்.
முதலாவது விடையை ஆராயலாம். ஜனாதிபதி கீர் கடந்த ஜூலை மாதம் துணை ஜனாதிபதி மாச்சாருடன் ஒட்டுமொத்த அமைச்சரவையை பதவி நீக்கம் செய்தார். இராணுவத்தில் இருந்து பிரிந்து சென்ற படைவீரர்களை ஒன்று திரட்டி தமக்கு எதிராக சதிப்புரட்சியில் ஈடுபட்டார் என்பது ஜனாதிபதியின் குற்றச்சாட்டு. அதில் உண்மையில்லை என்கிறார், மாச்சார். இவர்களது அதிகாரப் போராட்டத்தின் பின்னணியில் இருப்பது இனக்குழும கசப்புணர்வுகள் தானென பரவலாகக் கூறப்படுகிறது.
தென்சூடான் என்பது அறுபதுக்கு மேற்பட்ட இனக்குழுமங்களைக் கொண்ட தேசம். இங்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 15 இலட்சம் பேர் டிங்கா குழுமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஜனாதிபதி கிர்ரும் அடங்குகிறார். சுமார் 8 இலட்சம் மக்கள் நெயூர் குழுமத்தைச் சேர்ந்தவர்கள். ஜனாதிபதிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாச்சார் - நெயூர் இனக்குழுமத்தவர். இரு தரப்பினருக்கும் இடையிலான சண்டையே சமகால நெருக்கடிக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது எனவும், இதன் விளைவாக டிங்கா, நெயூர் இனக்குழுமங்களைச் சேர்ந்தவர்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள் எனவும் பரவலாகக் கூறப்படுகிறது.
டிங்கா, நெயூர் இனக்குழுமங்களுக்கு இடையிலான பகைமை இன்று நேற்று தொடங்கியது அல்ல. இன்று ஆகக்கூடுதலான உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்படும் ஜொங்லி என்ற மாநிலத்தின் தலைநகராகத் திகழும் பொர் நகரின் கடந்த காலத்தை ஞாபகப்படுத்தலாம். அன்று தென்சூடானின் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய கிளர்ச்சிக் குழுவில் இருந்து மாச்சார் பிரிந்து சென்ற சமயத்தில், நெயூர் குழுமத்தைச் சேர்ந்த ஆயுதபாணிகள் பொர் நகரில் பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள். இந்த வன்முறைகளில் டிங்கா சமூகத்தைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் வரை பலியானதாக சர்வதேச பொதுமன்னிப்புச்சபை மதிப்பீடு செய்திருந்தது. இதனை விட அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
அடுத்ததாக இரண்டாவது விடையை ஆராய்வோம். தென்சூடானின் சமீபத்திய வரலாற்றை ஆராய்ந்தால், இனக்குழுமங்களுக்கு இடையிலான வன்முறையானது டிங்கா - நெயூர் சமூகங்களைத் தாண்டிச் செல்வதை அறியக் கூடியதாக இருக்கும். தென் சூடான் சுதந்திர நாடாக பிரிந்து செல்ல வேண்டுமா? என்பதைத் தீர்மானிப்பதற்காக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து முர்லே என்ற இனக்குழுமத்திற்கும் டிங்கா குழுமத்திற்கும் இடையில் தலைதூக்கிய சண்டையைக் குறிப்பிட முடியும்.
இந்த சண்டையின் தொடர் விளைவுகளால் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பலியானதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியிருக்கின்றன.இங்கு இன்னொரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. இன்று ஜனாதிபதி கிர்ருக்கு எதிரான சண்டையில் முன்னாள் துணை ஜனாதிபதி மாச்சாரின் படையணி மாத்திரமன்றி மற்றொரு படையணியும் உள்ளது. இந்தப் படையணிகள் ஜெனரல் பீற்றர் காடெட் என்பவருக்கு சொந்தமானவை.
ஜெனரல் பீற்றர் வல்லமை மிக்க படைத்தளபதி. அவர் தென்சூடானின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடத்திய ‘சூடானிய மக்கள் விடுதலைச் சேனை’யை (SPLA) வழிநடத்தியவர்.
தென்சூடான் விடுதலை பெற்ற பின்னர், இவர் சூடானிய அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்டிருந்தார் என்பது மிகவும் முக்கியமான விடயம். தென்சூடானில் யுனிட்டி ஸ்ரேட் என்ற மாநிலம் உள்ளது. இந்த மாநிலம் எண்ணெய் வளம் செறிந்தது. இந்த மாநிலத்தில் SPLA யிற்கு எதிராக ஆயுதமேந்தும் கிளர்ச்சிக்குழுவிற்கு ஜெனரல் பீற்றர் தலைமை தாங்கி வழிநடத்தினார். இதற்கு முக்கியமான காரணம், தென்சூடானின் உருவாக்கத்திற்கு வித்திட்ட உடன்படிக்கையில் முன்னாள் கிளர்ச்சியாளர்களை தேசிய இராணுவத்தில் முறையாக இணைத்துக் கொள்ளக்கூடிய ஏற்பாடுகள் இல்லாதிருந்தமை தான். சூடானிய மக்கள் விடுதலை இயக்கம் என்ற ஆளும் கட்சியின் தலைமையிலான இராணுவத்தில் தாம் பாதுகாப்பாக இல்லையென முன்னாள் கிளர்ச்சியாளர்கள் கருதினார்கள். அதன் விளைவாக, ஜெனரல் காடெட் முதலானவர்கள் வெளியேறினார்கள்.
இங்கு ஜெனரல் காடெட் என்பவர் நெயூர் இனக்குழுமத்தை சேர்ந்தவராக இருக்கிறார். அவர் முன்னாள் துணை ஜனாதிபதி மாச்சாருடன் சேர்ந்து செயற்படுகிறாரா அல்லது தனியாக இயங்குகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
எனினும், தலைநகர் ஜூபாவில் டிங்கா ஆயுதபாணிகளால் நெயூர் மக்கள் கொல்லப்பட்டதால் ஜெனரல் காடெட் ஆத்திரமடைந்துள்ளார் என்பது தெரிகிறது. அவரது நெயூர் படைவீரர்கள் பொர் நகரில் டிங்கா மக்களைத் தாக்கியிருக்கிறார்கள். அந்தத் தாக்குதலின் விளைவாக அதிக மரணங்கள் சம்பவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஜனாதிபதி கீர், முன்னாள் துணை ஜனாதிபதி மாச்சார் ஆகியோர் போர் நிறுத்தத்திற்கு உடன்படும் பட்சத்தில் மற்றுமொரு அபாயம் நிகழ வாய்ப்ப்புண்டு. ஜெனரல் காடெட் விரைவில் முர்லே இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்களுடன் கைகோர்க்கக்கூடிய அபாயம் அதுவாகும். அவ்வாறு நடந்தால் தென்சூடானின் பிரச்சனை மற்றுமொரு திசையை நோக்கி நகரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
சூடான் தனியொரு நாடாக இருந்த சமயத்தில், வடசூடான் - தென்சூடான் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை உருவாக்கிய சர்வதேச சமூகம், தென்சூடான் என்ற தனிநாட்டின் மீது வலிந்து திணித்த தீர்வுத் திட்டம் பொருத்தமானதாக இருக்கவில்லை என்பது பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தென்சூடான் என்ற நாட்டுக்குள் யுனிட்டி ஸ்டேட் மாநிலத்தின் வளங்களை முறையாகப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஏற்பாடுகளுடன் அதற்கு சரியானதொரு அந்தஸ்து கிடைத்திருந்தால், ஜெனரல் காடெட் தனித்துச் சென்றிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.
அதுபோன்று, முன்னாள் கிளர்ச்சி யாளர்களை தேசிய இராணுவத்தில் இணைப்பதற்குரிய ஏற்பாடுகள் சரியாக இருந்திருக்குமானால், படை வீரர்கள் ஜெனரல் காடெட்டையோ, மாச்சாரையோ பின்தொடர்ந்து சென்றி ருக்க மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, தென்சூடானிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுக்கும் நடைமுறையில் பல்வேறு இனக்குழுமங்களின் உரிமைகளை அங்கீகரிக்கக்கூடிய சரியானதொரு தீர்வுத் திட்டத்தை சர்வதேச சமூகம் முன்வைத்திருந்தால், இன்று இனக்குழும பிரச்சனை பூதாகரமானதாக தலைதூக்கியிருக்க மாட்டாது.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக