செவ்வாய், 24 டிசம்பர், 2013

பிரான்ஸில் உலகின் முதலாவது செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சை

உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சை பிரான்ஸ் வைத்தியர்களால் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டுள்ளது.

75 வயதான ஒருவருக்கு செயற்கை இதயம் பொருத்தி பிரான்ஸ் வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்த செயற்கை இதயம் 5 வருடங்களுக்கு தொடர்ந்து செயற்படக்கூடியது என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இதய செயற்பாட்டுக்கான பெட்டரியை உடலுக்கு வெளியில் அணிய வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட செயற்கை இதயங்கள் தற்காலிக பயன்பாட்டுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை இதயத்தை விட செயற்கை இதயத்தின் எடை அதிகம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல