செவ்வாய், 24 டிசம்பர், 2013

மகனின் அஸ்தியை வைரமாக மாற்றிய தந்தை

விபத்தில் பலியான தனது மகனின் அஸ்தியை வைரமாக மாற்றியுள்ளார் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர். தமது அன்புக்குரியவர் இறந்துபோனால், அவர்களது நினைவாக அவர்கள் பயன்படுத்தியப் பொருட்களைப் பாதுகாப்பது பலரின் வழக்கம். ஆனால் இதுவரை கேட்டிராத புதிய முறையாகத் தனது இறந்துபோன மகனின் சாம்பலை வைரமாக மாற்றியுள்ளார் இத்தாலியைச் சேர்ந்த பாசமிகு தந்தை.

இத்தாலியின் வடக்குப்பகுதியில் உள்ள டிரேவிசோ என்ற நகரில் வாழ்ந்துவரும் 55 மதிக்கத்தக்க செல்வந்தர் ஒருவர், தனது 20 வயது மகனை இந்த ஆண்டு ஆரம்பத்தில் கார் விபத்து ஒன்றில் பறி கொடுத்தார். பின்னர் அவனது உடல் சொந்த ஊரிலேயே புதைக்கப்பட்டது. ஆனபோதும், மகன் நினைவிலேயே வாடிய தந்தை மகனது உடலை வைரமாக்க முடிவு செய்தார்.

அதற்காக அவனது உடலைத் தோண்டியெடுத்து எரியூட்டினார். அதன் மூலம் கிடைத்த அஸ்தியைச் சேகரித்தார். அந்த அஸ்தியை சுவிட்சர்லாந்தில் உள்ள ஆய்வகம் ஒன்றிற்கு அனுப்பினார். அங்கு அஸ்தியில் உள்ள காபனைப் பிரித்தெடுத்து ஒரு அறையில் பாதுகாத்து, அதன்பின் அதிக அழுத்தம் மற்றும் எரிமலை ஒத்த வெப்பத்தை அந்த அறைக்குள் செலுத்துவதன்மூலம், அதனை வைரமாக மாற்றியுள்ளனர்.

இந்த அஸ்தி வைரம் செய்யப்படுவதற்கு 18,000 டாலர் செலவானதாகவும், மேலும், சரியாக எட்டு மாதங்கள் கழிந்த நிலையில் அவரது மகனின் நினைவஞ்சலி வைரம் அத்தந்தைக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல