செவ்வாய், 24 டிசம்பர், 2013

AK 47 துப்பாக்கி​யை உருவாக்கிய கலஷின்கொவ் காலமானார்

AK47-Mikhail-Kalashnikov
AK 47 துப்பாக்கி உருவாக்குநர் மிகெய்ல் கலஷின்கொவ் இயற்கை எய்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவின் அல்டாய் மலைப் பகுதியில் 1919 ஆம் ஆண்டு மிகவும் வறிய குடும்பத்தில் 17 பேர்களில் ஒருவராக பிறந்த அவர் தனது 94 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

AK 47 என்ற தன்னியக்க துப்பாக்கி உலகளாவிய ரீதியில் மிகவும் பழக்கப்பட்ட ஒன்றென்பதுடன், பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில் உற்பத்திச் செலவு குறைந்த AK 47 துப்பாக்கி நம்பகத்தன்மையானதும் பராமரிக்க இலகுவானது என்பதும்
குறிப்பிடத்தக்கது.

உள்ளக இரத்தக் கசிவு காரணமாக கடந்த நவம்பர் மாதம் கலஷின்கொவ் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல