''இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்'' விடுதலையின் பின்னர் மண்டேலா கூறியது
உலகம் முழுவதையும் மண்டேலா என்ற வார்த்தையை உச்சரிக்க வைத்துவிட்டு உலக ஜனநாயகத்தின் தந்தையான நெல்சன் மண்டேலா தனது இறுதிப் பயணத்தை ஆரம்பித்துவிட்டார். உலகையே சோகத்தில் ஆழ்த்திய மனிதநேயமிக்க இந்த மாபெரும் மனிதனின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை தென்னாபிரிக்காவில் அன்னார் பிறந்த இடமான குலு என்ற இடத்தில் அரச மரியாதையுடன் பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ளது.
அரச தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் முதற்கொண்டு சிறுவர்கள் வரை ஜனநாயகத்தின் தந்தை நெல்சன் மண்டேலாவின் மறைவு காரணமாக ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் தேவ ஆராதனை ஜொஹன்னஸ்பேர்க்கில் உள்ள எப்.என்.பி. . மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 70 க்கும் மேற்பட்ட உலக தலைவர்களும் பல்லாயிரக்கான மக்களும் திரண்டு மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விசேடமாக ஐ.நா. செயலர் பான் கீ. மூன், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முன்னாள் ஜனாதிபதிகள் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களும் பிரபலமானவர்களும் இந்த தேவ ஆராதனையில் கலந்துகொண்டனர். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
அதனையடுத்து தற்போது அவரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலியை உலகத் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை செலுத்திவருகின்றனர். முழு உலகத்தினதும் அவதானம் தென்னாபிரி்க்கா மீது திரும்பியுள்ளது. அந்தளவுக்கு இந்த மாபெரும் உலகம் போற்றும் தன்னலமற்ற மனிதன் சேவையாற்றியுள்ளார்.
தென்னாபிரிக்காவில் நிறவெறி அடக்கு முறைக்கு எதிராக அமைதி வழியில் போராடி அதில் வெற்றியும் கண்ட ஒரு உன்னத மனிதரின் இழப்பானது பாரியதொரு உணர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தனது வாழ்க்கையில் பொன்னான 27 வருடங்களை சிறையிலேயே கழித்துவிட்ட நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலை பெற்று மீண்டும் தனது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய சேவையை உலகத்துக்கு வழங்கினார். அரசியல் தலைவர் ஒருவர் மிக நீண்டகாலம் சிறையில் காலத்தை கழித்தார் என்றால் அவர் மண்டேலாதான் என்ற மேலதிக தகவலையும் நாம் கவனத்திற்கொள்ளவேண்டும்.
தன்னலமற்ற வகையில் மக்களின் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்த அந்த உன்னத மனிதன் உண்மையில் போற்றத்தக்கவராகவே வாழ்ந்து சென்றுள்ளார். முழு உலகையுமே ஒரு கணம் சோகத்தில் ஆழ்த்திய நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் தமது அனுதாபங்களை வெளியிட்டுவருகின்றனர்.
கடந்த ஆறாம் திகதி முதல் தென்னாபிரிக்காவின் .ஜொஹன்னஸ்பேர்க் நகரில் கூடிவரும் பெரியோர் முதல் சிறியோர் வரை அன்னாருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். அத்துடன் தென்னாபிரிக்காவில் துக்க அனுஷ்டிப்பு காலம் இடம்பெற்றுவருவதுடன் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. இலங்கையிலும் கடந்த 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் துக்க தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடப்படவேண்டும்.
நிறவெறிக்கு எதிராக அமைதி வழியில் போராடி பல்வேறு கொடுமைகளையும் வேதனைகளையும் அனுபவித்து வந்த மண்டேலா பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பராகவே காணப்பட்டார்.
நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் உள்ள குலு என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவராக இருந்தவர். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள் என்று கூறப்படுகின்றது. 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவரின் முழுப்பெயர் 'நெல்சன் ரோபிசலா மண்டேலா'. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைக்கப்பட்டார். நெல்சன் மண்டேலா சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்று வந்தார்.
கல்வியறிவைப் பெறுவதில் மண்டேலா கடும் நாட்டம் கொண்டிருந்தார். லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941-ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி கற்றுள்ளார். மேலும் தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் நெல்சன் மண்டேலா பணியாற்றிவந்துள்ளார்.
தென்னாபிரிக்க நாட்டில் கறுப்பர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அந்நாட்டில் வெள்ளையர்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர். எனினும் அக்காலத்தில் ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடமே இருந்தது.
இந்நிலையில் மண்டேலா 1939 ஆம் ஆண்டு தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து,கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றி கண்டார்.
அதாவது ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து அவர் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.
1943 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார் மண்டேலா. 1948 ஆம் ஆண்டு தென்னா பிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, கறுப்பின மக்களுக்கெதிராக முறையற்ற நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
இந்நிலையில் இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா அரசியலுக்குள் குதித்தார். கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான "ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சியின் முதன்மை பொறுப்புக்கு .மண்டேலா நியமிக்கப்பட்டார். அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார்.
இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது. எனினும் நான்காண்டுகள் விசாரணைக்குப் பின்னர் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டு சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயற்பட்டார்.
அதன் பின்னர் மீண்டும் போராட்டங்கள் தொடர்ந்தன. அவரை கைது செய்வதற்கும் பல தடவைகள் மீண்டும் முயற்சிக்கப்பட்டது. சில காலம் மறைந்து வாழ்ந்த நிலையில் தென்னாபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மீண்டும் கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்தவகையில் மண்டேலாவுக்கு 1964-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் திகதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயதாக இருந்தது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்ததுடன் 1990 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருந்த காலத்தில் மண்டேலா பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். தனது மனைவியைக்கூட சந்திப்பதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் 1988 ஆம் ஆண்டு கடுமையான நோய் அவருக்கு ஏற்பட்டது. நோய் காரணமாக, மரணத்தின் எல்லைக்கே சென்ற மண்டேலா வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் 1990 ஆண்டு மண்டேலாவின் விடுதலையை முழு உலகமும் கொண்டாடியது. விடுதலையாகி கேப்டவுன் நகருக்கு வந்த மண்டேலா அங்கு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் அங்கு கூறியதாவது
''இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்'' என்று அவர் அன்று கூறியிருந்தார்.
1990 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற மண்டேலா அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பதவியேற்றார். ஜனாதிபதியானதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு முதல் தென்னாபிரிக்கப் பாடசாலைகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தமை முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது. தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக 1994 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட மண்டேலா 1999 ஆண்டு பதவியை விட்டு விலகியதுடன் இரண்டாவது முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார்.
ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னரும் உலக மக்களின் மாபெரும் தலைவராகவும் மனித நேயத்தின் உற்ற நண்பனாகவும் மண்டேலா விளங்கினார்.
தென்னாபிரிக்காவில் நிறவெறி வன்முறை இடம்பெற்ற காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் ஆகியோருக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனது விடுதலையின் பின்னர் நெல்சன் மண்டேலா பல முயற்சிகளை முன்னெடுத்தார். அந்தவகையில் தென்னாபிரிக்காவில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை நியமித்து நல்லிணக்கத்துக்கு வழிகோலினார்.
தென்னாபிரிக்காவில் செயற்படுத்தப்பட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவானது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் உலகத்திலேயே மிகவும் வலுவான சிறந்த ஆணைக்குழுவாக கருதப்படுகின்றது. உலக வரலாற்றிலேயே உண்மைகளை அறிந்து மன்னித்து இணக்கமாக வாழ்வதற்கான ஒரு சிறந்த முன்மாதிரியாக இந்த முறைமை கருதப்படுகிறது.
இந்நிலையில் நெல்சன் மண்டேலா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் 8 ஆம் திகதி பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் உலகில் மண்டேலா நலமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை நடத்திவரப்பட்டது. எனினும் கடந்த ஐந்தாம் திகதி தனது 95ஆவது வயதில் மண்டேலா இவ்வுலகைவிட்டு மறைந்தார். முழு உலகிலும் ஒரு புதுமையை படைத்துவிட்டு வெற்றிவீரனாகவே அவர் உலகை விட்டு மறைந்துள்ளார்.
மண்டேலாவின் சேவையை பாராட்டி அங்கீகாரத்தை வழங்குவவதற்கு உலகம் தவறவில்லை. உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும்.
அத்துடன் உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் உலக அமைதிக்கான நோபல் பரிசு 1993 ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1990ஆம் ஆண்டில் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் இந்த மனிதநேயமிக்க மனிதருக்கு வழங்கப்பட்டுள்ளது. .
இந்நிலையில் நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், சீன ஜனாதிபதி ஸி ஜின்டிங், பிரித்தானிய எலிஸபெத் மகாராணியார் உள்ளிட்ட உலக தலைவர்கள் அனுதாபங்களை தெரிவித்துள்ளதுடன் அவருக்கு இறுதி அஞ்சலியும் செலுத்தினர்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நெல்சன் மண்டேலாவின் வாழ்வால் ஈர்க்கப்பட்ட உலகிலுள்ள எண்ணற்றவர்களில் தானும் ஒருவர் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மண்டேலாவின் மறைவுக்கு அனுதாப செய்தியை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தென்னாபிரிக்க சுதந்திரப்போராட்டத்திற்கான அவரது துணிச்சல்மிகுந்த தலைமைத்துவம் முன்னுதாரணமிக்கதும் உலகெங்கிலுமுள்ள சமாதானத்தை விரும்பும் மக்களை பெரிதும் ஈர்த்ததுமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மண்டேலாவின் மறைவினால் துயருற்றுள்ள உலக அரசியல் தலைவர்கள் செய்யவேண்டியதெல்லாம் இனவெறி, நிறவெறி, வன்முறை, அடக்குமுறை அற்ற உலகத்தை கட்டியெழுப்புவதேயாகும்.
நிறவெறி அடக்கு முறைக்கு எதிராக போராடிய மண்டேலா மறைந்துவிட்ட நிலையிலும் அவரின் எண்ணங்கள் மற்றும் ஆதங்கம் முழுமையாக நிறைவேறவில்லை. தென்னாபிரிக்காவில் அவரின் கனவு நனவாகியிருந்தாலும் அவ்வாறான சமூக மற்றும் அடிப்படை மாற்றங்கள் இடம்பெறவேண்டிய இடங்கள் உலகில் இன்னும் உள்ளன. நல்லிணக்கம் என்பது செயற்பாட்டு ரீதியில் செயற்படுத்தப்படவேண்டிய தேவை இன்னும் உலகில் உள்ளது.
எனவே மண்டேலா கற்றுத்தந்த பாடங்களை கொண்டு உலகில் இன நல்லிணக்கத்தையும் சகோதரத்துவ தேசிய ஒற்றுமையையும் உருவாக்கவேண்டியதே இன்றைய தலைவர்கள் மண்டேலாவுக்கு செய்கின்ற மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்.
மண்டேலா எதனை எதிர்த்துப் போராடினாரோ எதற்காக தனது வாழ்க்கையில் 27 வருடங்களை சிறையில் கழித்தாரோ அந்தக் காரணங்கள் இன்னும் உலகில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே மண்டேலா எவ்வாறான அமைதியான மற்றும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையுடனான உலகை காண விரும்பினாரோ அதனை நாம் நோக்கி பயணிப்பதே நாம் செய்யவேண்டியதாகும். கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய கறுப்பு சூரியன் அஸ்தமித்துவிட்டது. எனவே இதன் பின்னர் உலகம் இருளில் மூழ்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது உலகத் தலைவர்களின் பொறுப்பாகும்
ரொபட் அன்டனி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக