தனது மகளின் காதலனான 18 வயது இளைஞன் தனது 2 வயது மகனை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகித்த தாயொருவர், மரம் வெட்டும் உபகரணத்தால் அந்த இளைஞனின் பிறப்புறுப்பை துண்டித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து இன்டியானா மாநிலத்திலுள்ள பிராங்ளின் நகரைச் சேர்ந்த லைன் வெலா (35 வயது) என்ற மேற்படி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ தினம் வெலா ஏனைய இருவருடன் இணைந்து தனது மகளின் காதலனான குறிப்பிட்ட இளைஞனை தனது வசிப்பிடத்தில் 3 மணித்தியாலங்கள் அடைத்து வைத்திருந்துள்ளார்.
இதன்போது வெலா அந்த இளைஞனிடம், எதிர்காலத்தில் ஒவ்வொரு தடவையும் பாலியல் உறவில் ஈடுபட நினைக்கும் போதும் உறுத்தும் மறக்க முடியாத காயத்தை ஏற்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் அந்த இளைஞனின் பிறப்புறுப்பை முள்ளுக்கரண்டியால் குத்தி காயப்படுத்த மேற்கொண்ட முயற்சி திருப்தியளிக்காததால், மின்சாரத்தால் இயங்கும் மரம் வெட்டும் உபகரணத்தை இயக்கி அதன் மூலம் பிறப்புறுப்பை வெட்டியுள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக