திங்கள், 24 பிப்ரவரி, 2014

பல்லுக்கு பல்: தாயின் பல்லை உடைத்த சவுதி நபரின் பல்லை உடைக்க கோர்ட் உத்தரவு

தாயின் பல்லை உடைத்த சவுதி நபருக்கு 2,400 கசையடி, பல் உடைப்பு, 5 ஆண்டு சிறை

ரியாத்: தாயின் பல்லை உடைத்த சவூதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் பல்லை உடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சவூதி அரேபியாவைச் சேர்ந்த 30களில் இருக்கும் நபர் ஒருவர் தனது தாயுடன் காரில் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தனது தாயை அடித்துள்ளார். அவர் தாக்கியதில் அந்த தாயின் பல் உடைந்து பறந்துவிட்டது.

இதையடுத்து தன்னை மகனிடம் இருந்து காப்பாற்றுமாறு அந்த தாய் சோதனைச்சாவடியில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். தாயை தாக்கிய மகனை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை மெக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தினர்.

தனது தாயை அடித்து பல்லை உடைத்ததை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறை, 2,400 கசையடி, ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒரு முறை பொதுமக்கள் முன்பு அவருக்கு 40 கசையடிகள் கொடுக்கப்படும், அவரது பல் ஒன்றும் உடைத்து எடுக்கப்படும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அவரது தாயின் முன்பல் உடைக்கப்பட்டதால் அவருக்கும் அதே முன்பல் உடைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல