திங்கள், 24 பிப்ரவரி, 2014

இந்த அறிகுறியெல்லாம் இருக்கா.. சான்ஸே இல்லைங்க, கண்டிப்பா அவன் உங்களை 'லவ்' பண்றான்!

பெரும்பாலான பெண்களைப் போலவே, நீங்களும் பல்வேறு ஆண்களை சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும் மற்றும் டேட்டிங் செல்லவும் செய்திருப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் ஓட்டத்தில், இது போன்ற சூழல்களில் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ அனுபவித்திருப்பீர்கள். இந்நேரங்களில், நீங்கள் சந்திக்கும் மனிதர் உங்களை காதலிக்கிறாரா அல்லது காதலிக்கவில்லையா என்பதை அறிவது கடினமாக இருந்திருக்கும்.



எனவே, நீங்கள் சந்தித்த ஆண் உங்களை உண்மையிலேயே விரும்புகிறாரா, இல்லையா என்பதை எப்படி அறிய முடியும்? இங்கே தரப்பட்டிருக்கும் 7 அறிகுறிகளை, உங்களவர் வெளிப்படுத்தினால், அவர் உங்களை மிகவும் விரும்புகிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.

உங்களை விரும்பும் நபர் உங்களுடைய உணர்வுகளையும், ஆசைகளையும் மற்றும் தேவைகளையும் மிகவும் கவனிப்பார். அவருடைய சொந்த விருப்பங்கள் மற்றும் தேவைகளைப் போலவே, உங்களுடைய விருப்பங்களையும் அவர் முக்கியமாக கருதுவார். அவர் உங்களுடைய நலனில் அக்கறை கொண்டிருப்பார் மற்றும் உங்களுடைய வாழ்க்கையை மேன்மையாக்க செயல்படுவார், சில நேரங்களில் தன்னுடைய விஷயங்களையும் விட்டுக் கொடுப்பார். அவர் உங்களை நன்றாக மதித்திருப்பதுடன், உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையும் மதித்திருப்பார்.

அவர் உங்களைப் பார்க்காமல் இருக்கும் வகையில் நேரத்தைக் கடத்த மாட்டார். அவருக்கு நேரம் இருக்கும் போதெல்லாம், உங்களுடன் இருக்கவும், தன்னுடைய நேரத்தை உங்களுடன் செலவிடவும் முயற்சிப்பார். நீங்கள் நெடுநாட்களாக தூரமாக இருந்தே தொடர்பில் இருந்தால், உங்களுக்கு எப்பொழுதெல்லாம் நேரம் உள்ளதோ அப்பொழுதெல்லாம் உங்களுடன் நேரத்தைக் கழிப்பார். முக்கியமான விழா நாட்களான-காதலர் தினம், நன்றி சொல்லும் தினம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் போன்ற நாட்களில் அவருடன் தான் நீங்கள் இருப்பீர்கள்.

அவருடைய மனதில் நீங்கள் தான் முன்னணியில் இருப்பீர்கள் மற்றும் நீங்கள் இருவரும் பார்க்கும் நேரங்களில் எல்லாம் அவர் உங்களை தொடர்பு கொள்வார். முடிவுகள் எடுக்கும் போது உங்களுடைய கருத்துகளைக் கேட்பார் மற்றும் நீங்கள் விரும்பும் விஷயங்களையும் கவனத்தில் கொள்வார். தன்னுடைய எதிர்கால திட்டங்களைப் பற்றி பேசும் போது, 'நான்' என்று சொல்வதற்கு பதிலாக 'நாம்' என்று குறிப்பிடுவார்.

உங்களுக்கு ஏதாவதொரு நல்ல விஷயம் நடந்தால், உங்களை விரும்பும் அந்த மனிதர் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்வார். நீங்கள் சவால்களை எதிர்கொள்ளும் வேளைகளில் உடனிருப்பார். உங்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் போதும் மற்றும் அவ்வாறு நடக்காத போதும் இந்த மனிதர் உங்களுடன் இருப்பார். உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் இந்த மனிதர், பிறந்த நாள், கிறிஸ்துமஸ் மற்றும் காதலர் தினம் போன்ற நாட்களில் பரிசுகளால் உங்களை திக்குமுக்காடச் செய்வார். உங்களை சிறந்த மனிதராக உருவாக்குவேன் என்று சவால்களையும் கூட உங்களிடம் அவர் விடுவார்.

பொது இடங்களில் உங்களுடைய கைகளை பிடித்துக் கொண்டும், தன்னுடைய கைகளால் உங்களை வளைத்து பிடித்துக் கொண்டும் அல்லது கட்டியணைப்பதன் மூலமாகவும் உங்களுடன் அன்புடன் நடந்து கொள்வார். உங்களுடன் இருப்பதை பெருமையாக கருதும் அவர், உங்களை தன்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்களிடம் அறிமுகம் செய்வார். குடும்ப விழாக்களுக்கும், நண்பர்களுடன் ஒன்றாக இருக்கும் போதும் மற்றும் தன்னுடைய நிறுவனங்கள் தொடர்பான நிகழ்வுகளிலும் அவர் உங்களை அழைத்துச் செல்வார்.

அவர் உங்களுடனும் மற்றும் உங்களுடைய உறவிலும் நம்பிக்கையானவராகவும், உண்மையானவராகவும் இருப்பார். தன்னுடைய பழைய பெண் நண்பர்கள் மற்றும் பிற தவறான விஷயங்களை உங்களிடமிருந்து விலக்கியே வைத்திருப்பார். அவர் சொல்வதையே மட்டுமே செய்வார் மற்றும் அவரால் செய்ய முடியவில்லையெனில் உங்களிடம் சொல்லுவார். ஏதாவது பிரச்னைகள் வந்தால், அவற்றை எதிர்கொண்டு முடிக்க நினைப்பார். அவர் முழுமையான மனிதராக இல்லாவிட்டாலும், ஒரு நல்ல மனிதராக இருக்க முயற்சி செய்வார்.

உங்களை விரும்பும் நபர் நீங்கள் விரும்பும் செயல்களை செய்ய ஊக்கம் தருவார், அதுவும் அவர் இல்லாமலேயே அந்த விஷயங்களை செய்வதாக இருந்தாலும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் நேரத்தைக் கழிக்க வேண்டும் என்று அவர் விரும்புவார். உங்களுடைய ஈடுபாடுகளை அறியவும் மற்றும் அவற்றுடன் வாழவும் உதவும் வகையில் உங்களை ஊக்குவிப்பார். அதன் மூலம் உங்களுடைய வாழ்வில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதையும், அவருடனான தொடர்பும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதையும் அவர் அறிவார்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல