திங்கள், 24 பிப்ரவரி, 2014

மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள்!!!

மகா சிவராத்திரி விரதம் என்பது ஹிந்து மதத்தில் மிக முக்கியமான விரதமாக கருதப்படுகிறது. மகா சிவராத்திரி விரதம் அதிக ஆன்மீக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த விரத்தத்தை மேற்கொள்பவர்கள், சிவபெருமானின் அருளை பெறுவார்கள். இது போக, இந்த விரத்தத்தை கடைப்பிடிப்பதால், மனிதர்களை தாக்கும் இரண்டு முக்கிய இயற்கை சக்திகளை கட்டுப்படுத்தலாம்.



இந்த இரண்டு முக்கிய சக்திகையும் 'ராஜாஸ்' என்றும் 'டமாஸ்' குணா என்றும் அழைக்கின்றனர். 'ராஜாஸ்' குணா என்பதற்கு எளிதில் உணர்ச்சிக்கு ஆட்படும் நடவடிக்கைகளின் தரம் என்று பொருளாகும். காம வெறி, கோபம் மற்றும் பொறாமை போன்ற தீயவைகள் அனைத்தும் 'ராஜா' குணாவால் பிறக்கிறது. 'டமாஸ்' குணா என்பது ஜடத்துவத்தின் தரம் அல்லது ஒரு செயலுக்கு எதிரான அக்கறையின்மை மற்றும் தடை. இருட்டு, அறியாமை, தடையம், மரணம் மற்றும் அழிவு போன்றவைகளை மேம்படுத்தும் 'டமாஸ்' குணா.

அதனால் ஒரு மனிதன் மோட்சம் அடைய வேண்டுமானால், இந்த தீய குணங்கள் அனைத்தையும் கைவிட வேண்டும். மகா சிவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம், இந்த இரண்டு குணாக்களின் கீழ் வரும் தீயவைகளில் இருந்து ஒருவர் விடுபடுகிறார் என்று நம்பப்படுகிறது.

அதனால் மகா சிவராத்திரி விரதத்தை நீங்கள் கடைபிடிக்க போகிறீர்கள் என்றால், அதற்கு முன்பாக கீழ்கூறிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பாரம்பரியப்படி, விரதம் கடைப்பிடிப்பவர்கள் விடியற்காலையில் கருப்பு எள்ளு விதைகள் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். விரதம் தொடங்கும் முன், உடலில் உள்ள மாசுக்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

விரதத்தை கடைப்பிடிப்பவர் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும் அல்லது வீட்டில் இருக்கும் சிவலிங்கத்தை தண்ணீர், தேன் மற்றும் பாலை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

சிவலிங்கத்திற்கு அபிஷேகத்தை செய்து முடித்த பின்பு, வில்வ இலைகள், ஊமத்தை பழம், அகாண்டா பூ, மஞ்சள், குங்குமம் மற்றும் சந்தனத்தை காணிக்கையாக படையுங்கள்.

சிவபெருமானுக்கு பால் பொருட்கள் என்றால் மிகவும் விருப்பமாகும். அதனால் கீர் மற்றும் பாலால் செய்யப்பட்ட இதர இனிப்புகளை சிவலங்கத்திற்கு காணிக்கையாக படைக்க வேண்டும். கஞ்சா இலைகளால் செய்யப்பட்ட மதிமயக்கும் பானமான பாங்கையும் சிலர் படைப்பார்கள்.

'ஓம் நம சிவாய' என்ற மந்திரத்தை பக்தர்கள் ஓதி, சிவலிங்கத்திற்கு இறை வணக்கங்களை செலுத்த வேண்டும். பின், சிவலிங்கம் முன்பாக ஒரு விளக்கை ஏற்றி வைத்து, ஆன்மீக பஜனைகளை பாட ஆரம்பிக்கவும்.

சிவராத்திரி விரதம் பகலில் தொடங்கி, இரவு முழுவதும் தொடர்ந்து, மறு நாள் காலை வரியா நீடிக்கும்.

விரதத்தின் போது சுத்தமாக உணவையே உண்ணக்கூடாது என்று எந்தவொரு கடுமையான விரத விதிமுறைகளும் கிடையாது. விரதம் கடைப்பிடிக்கும் நபர், பழச்சாறுகள், பழங்கள் மற்றும் விசேஷ விரத உணவுகளான குட்டு சப்பாத்தி, அவில், நட்ஸ், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படாத குழம்புகள் போன்றவைகளை உட்கொள்ளலாம். இருப்பினும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு எதுவும் உண்ணக்கூடாது.

விரதத்தை கடைப்பிடிக்கும் பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து, சிவபெருமானை பற்றிய கதைகள் கேட்டும், அவரை புகழ்ந்து பஜனைகள் பாடியும் கழிக்கலாம்.

மறுநாள் காலை மீண்டும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து இறை வணக்கங்கள் செய்து முடித்த பிறகு, உங்கள் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். சிவபெருமானுக்கு படைத்த பிரசாதத்தை உட்கொண்டு உங்கள் விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல