“புடவை, சுடிதார் மட்டுமல்ல... காக்ரா, அனார்கலி சல்வார், ஸ்கர்ட், ஜீன்ஸ் என எந்த உடையாக இருந்தாலும் அதற்கு மேட்ச்சாக இப்போது வளையல்களும் வந்துவிட்டன’’ என்கிறார் அனுராதா. இவர் சென்னையில் வளையல்களுக்காகவே பிரத்தியேகமான கடை ஒன்றை நிர்வகித்து வருகிறார்.
‘‘இது எங்க சொந்த இடம். ரொம்ப நாள் பூட்டியே வச்சிருந்தோம். நான் பல் மருத்துவம் படிச்சேன். ஆனா, அது தொடர்பா வேலைக்கு போகவிருப்பமில்ல. சரி, காலியா இருக்கிற இந்த இடத்துல ஏதாவது தொழில் செய்யலாமேனு தோணிச்சு. அப்படி ஆரம்பிச்சதுதான் வளையல் கடை. ‘சென்னைல இல்லாத வளையல் கடையா’னு எல்லாரும் கேட்டாங்க. ‘ஆமா... இது ஸ்பெஷல் கடைதான்’னு சொல்லாம புரிய வைச்சோம். அதனாலத்தான் கடந்த நான்கு வருஷங்களா கடையை வெற்றிகரமா நடத்த முடியுது.
எங்கக் கடைல இருக்கிற வளையல்கள் எல்லாமே உயர்தரமானவை. இதுக்காக டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர்னு தேடித் தேடி, பார்த்துப் பார்த்து இறக்குமதி பண்ணறோம். கண்ணாடி, மரம், அரக்கு, மெட்டல்னு ரகம் ரகமா, டிசைன் டிசைனா வளையல்கள் இங்க உண்டு. புடவையோ, சல்வாரோ, ஜீன்சோ... எந்த உடையா இருந்தாலும் மேட்ச்சா வளையல் தருவோம். உதாரணமா நீல நிறத்துலயே 20 வகையான ஷேட்ஸ் உண்டு.
இந்த 20 ஷேட்ஸுக்கும் தகுந்தா மாதிரி இப்ப வளையல்கள் கிடைக்குது. அதுல விருப்பமானதைத் தேர்ந்தெடுத்துக்கலாம்’’ என்று சொல்லும் அனுராதா, வளையல்களை பராமரிக்க டிப்ஸும் தருகிறார். கையில் வளையல்களை அணியும்போது அழுத்தாமல் அணிய வேண்டும். அழுத்தினால் கண்ணாடி வளையல்கள் உடையும்.
வளையல்களை அதற்குரிய ஸ்டாண்டில் மாட்டி வைத்தால் நல்லது. இந்த ஸ்டாண்டையும் வெளியே வைக்காமல் கப்போர்டில் வைத்தால் தூசி படியாமல் இருக்கும்.
இப்போது கண்ணாடி மற்றும் மெட்டல் வளையல்களில் சம்கி வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த வளையல்களை தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை நனைத்துக் காயவைத்தால், சருமத்தில் சம்கியானது ஒட்டாமல் இருக்கும்.
அரக்கு மற்றும் கற்கள் பதித்த வளையல்களை ஸ்டாண்டில் மாட்டாமல், அதற்குரிய டப்பாவில் வைத்தால் கற்கள் உதிராமல் இருக்கும்.
தினகரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக