செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

டீன் ஏஜ் பெண்ணுக்கு டீட்டெய்லா சொல்றோம்!

பார்க்கிற எல்லாவற்றுக்கும் ஆசைப்படுகிற வயது டீன் ஏஜ். சக மாணவி முதல் சினிமா நடிகை வரை யார் என்ன செய்தாலும் கவனிக்கவும், பிடித்திருந்தால் பின்பற்றவும் நினைக்கிற வயது. டீன் ஏஜுக்கு முந்தைய பருவத்தினருக்கும் சரி... டீன் ஏஜை கடந்த பிறகும் சரி... ‘இப்படித்தான் உடை அணிய வேண்டும், நகை அணிய வேண்டும்’ என சில வரைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். ஆனால், டீன் ஏஜில் மட்டும்தான், விருப்பங்கள் அனைத்தையும் முயற்சி செய்து பார்க்கிற சுதந்திரம் இருக்கும். அந்த வயதில் என்ன வேண்டுமானாலும் அணியலாம். காரணம், அவர்கள் எதைச் செய்தாலும் அது அழகு... ஃபேஷன்!



பெரிய பெரிய கலர் ஃபுல் வளையங்கள், பெரிய ஜிமிக்கிகள் அணிவதை விரும்பவும் ஒரு பிரிவினர் உண்டு.

கல்லூரிப் பெண்களின் விருப்ப நகைகளில் ஜங்க் ஜுவல்லரி (பெரிதாக, கன்னாபின்னா கலர்களில், அளவுகளில், டிசைன்கள்), ஆன்ட்டிக் ஜுவல்லரி (பழங்காலத்து தோற்றம் கொண்டவை), ஆக்சிடைஸ்டு ஜுவல்லரி (லேசாக கருத்துப் போன வெள்ளியின் தோற்றம் கொண்டது), பிளாக் மெட்டல் மற்றும் ஒயிட் மெட்டல் ஜுவல்லரி என எல்லாம் உண்டு.

சில பெண்கள் காதணிகளில் மட்டும் அதிக கவனம் செலுத்துவார்கள். குழந்தைகளைப் போலவே கல்லூரிப் பெண்களுக்கும் பொம்மைகள் மீது மோகம் உண்டு. டெடி பியர் வைத்து விளையாடுவதிலிருந்து, பொம்மை உருவம் பதித்த பொருட்களை உபயோகிப்பது வரை எல்லாம் அதன் பிரதிபலிப்புகளே... காதணிகளும் விதிவிலக்கல்ல. இது தவிர, ஒற்றைக் கல் வைத்தது, பூ உருவம் கொண்டது, பட்டாம்பூச்சி, இதயம், டயமண்ட், சிலுவை, மீன், எலும்புக்கூடு, செருப்பு என விருப்பமான உருவங்கள் தாங்கிய காதணிகளை அதிகம் அணிகிறார்கள்.

‘ஃபெதர் ஜுவல்லரி’ எனப்படுகிற இறகு வைத்த நகைகள் டீன் ஏஜ் மற்றும் கல்லூரிப் பெண்கள் மத்தியில் ரொம்பவே ஹாட். அதில் மயிலிறகு தான் நம்பர் 1. வேறு வேறு கலர்களில் கிடைப்பதால் மற்ற இறகுகள் வைத்த நகைகளுக்கும் டிமாண்ட் அதிகம்.

கொலுசு அணிவதிலும் நாகரீகம் மாறிப் போயிருக்கிறது. ஒரே ஒரு காலில், கயிறு மாடல் கொலுசு அணிவதுதான் ஹாட் ஃபேஷன். தன்னை இன்னும் கொஞ்சம் தைரியமான, நாகரீகமான பெண்ணாகக் காட்டிக் கொள்ள விரும்புவோர், தண்டை வடிவிலான காலைக் கவ்வும் கொலுசு அணிகிறார்கள்.

கழுத்துக்கு மல்ட்டி கலர் மணிகள் வைத்த நீளமான செயின்... அல்லது பெரிய டாலர் வைத்த கருப்புக் கயிறு...

மோதிர விரலைத் தவிர்த்து, ஆள்காட்டி விரலில் பிளாக் மெட்டலில் பெரிய மோதிரம் அணிவதே லேட்டஸ்ட். இரண்டு கைகளிலும் 3 - 3 விரல்களிலும் மோதிரங்கள் அணிவதும் ஃபேஷன். அந்த 3 மோதிரங்களும் பிளாஸ்டிக், பிளாக் மெட்டல் மற்றும் சில்வர் என கலவையாகவோ, ஒரே மாதிரியோ இருக்கலாம்.

கல்லூரிப் பெண்களின் நடை உடை பாவனைகள் பெரும்பாலும் அவர்களது மனநிலையின் பிரதிபலிப்பு களாகவே இருக்கும். தினசரி காலேஜ் போகும் போது, குட்டி டாலர் வைத்த மெல்லிய செயின், குட்டி தோடு, மெல்லிய பிரேஸ்லெட்... இவைதான் பெரும்பாலான பெண்களின் சாய்ஸ்.

கல்லூரிப் பெண்களின் நடை உடை பாவனைகள் பெரும்பாலும் அவர்களது மனநிலையின் பிரதிபலிப்புகளாகவே இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

* ஹோம்லியான முகவாகு உள்ளவர்கள், குட்டி டாலர் வைத்த செயினும் சின்ன தோடும் அணியலாம்.

* கழுத்து மிகவும் அகலமாக இருப்பவர்கள், கழுத்தை மூடியபடி துப்பட்டா அணிந்து கொண்டு, காதுகளுக்கு (இன்னொரு துளையில்) இரண்டு தோடுகள் அணியலாம். கழுத்தின் மீது கவனம் திரும்பாமல், காதுகளின் மீது குவியும்.

* உயரம் குறைவானவர்கள், நீளமான சங்கிலி மற்றும் தொங்கும் மாடல் காதணிகளைத் தவிர்க்க வேண்டும்.

* உடைக்கு மேட்ச்சாக நகை அணிவது மட்டும் முக்கியமல்ல... அதே கலரில் நெயில்பாலீஷ், செருப்பு மற்றும் ஹேண்ட்பேக் வைத்துக் கொள்வதும் முக்கியம்.

நீளமாக முடி வளர்ப்பதும், இன்றைய பெண்களிடம் ஒரு ஃபேஷன். நீளமான முடியை பின்னல் போடும் போது, காதோடு ஒட்டிய சின்ன தோடுகள் அழகு. அதுவே தலையை விரித்தபடி விடுவதானால், நீளமான, தொங்கும் மாடல் காதணிகள்தான் பொருத்தம்.

ஒற்றைக் கைக்கு பட்டையான, ஒரே வுட்டன், பிளாஸ்டிக், திரெட், மெழுகு, காப்பர் ஃபினிஷ் மற்றும் பிளாக் மெட்டலில் ஒரே ஒரு பெரிய வளையல்...

இது போரடிக்கும் போது, ஒரு கையில் மட்டும் மெலிதான வளையல்கள்... அதாவது, கையையே மறைக்கும் அளவுக்கு ஒன்று, ஒன்றரை டஜன் வளையல் களை மொத்தமாக அடுக்கிக் கொள்வது தான் இப்போது ஃபேஷன்.


தினகரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல