பாவாடை தாவணியில் பார்த்த உருவமா...? என்றப் பாடல் இப்போது வேலைக்கு ஆகாது என்று நினைத்தீர்கள் என்றால் கன்னத்தில் போட்டு கொள்ளுங்கள். சென்ற தலைமுறையின் பாவாடை தான், இன்றைய தலைமுறையின் லேட்டஸ்ட் ஃபேஷன். ஸ்கர்ட், ராப்பரவுண்ட், மெர்மெய்ட், லெஹங்கா, லாச்சா, என்று விதவிதமான பெயர்களில் இன்று வலம் வரும் வஸ்து, சாட்சாத் சென்ற தலைமுறையின் பாவாடைதான்..
இதில் முட்டிக்கால் வரை மட்டுமே ஸ்கர்ட் இருக்கும் என்ற காலம் மலையேறிவிட்டது. கணுக்கால் வரை நீளமாக அணிவது தான் இன்றைய நிலவரம். ஸ்கர்ட்டின் வகை, டிசைன் மற்றும் யாருக்கு எந்த உடை பொருந்தும் என்று விளக்குகிறார் உடை அலங்கார நிபுணர் தபசும்.
ஸ்கர்ட்களின் ஏ லைன், அம்பர்லா, பென்சில், மெர்மெய்ட், பானல், ஏசிமெட்ரிகல், என பல வகைகள் உண்டு. ஃபேஷனுக்கு ஏற்ப இதன் டிசைன்களும் மாறுபடும். ஏ லைன் ஸ்கர்ட் ஆங்கில எழுத்து ஏ வடிவில் இருக்கும். நீளமான கால்கள் உள்ள பெண்கள் இதை அணிந்தால் அழகாக இருக்கும். பானல் ஸ்க்ர்ட், பள்ளி சிறுமிகள் அணியும் ஸ்கூல் யூனிபார்ம் போன்ற ஸ்கர்ட். ஒருவரின் உடலமைப்புக்கு ஏற்ப இதில் உள்ள ஃபிரில்களை அமைக்கலாம். குண்டாக இருப்பவர்கள் ஆறு பிரில்களும், ஒல்லியாக இருப்பவர்கள் நிறை ஃபிரில்களும் தைத்துக் கொள்ளலாம்.
மெர்மெய்ட் ஸ்கர்ட், மீனின் வால் போன்ற அமைப்பு கொண்ட ஸ்கர்ட். இடுப்பு பகுதி அகண்டு, கீழிறங்கும் போது அப்படியே குறுகி வரும். குண்டாக இருக்கம் பெண்கள் அதை அணியக்கூடாது.
ராப்பரவுண்ட், இதை பெண்கள் அணியும் லுங்கி என்று சொல்லலாம். கண்களை பறிக்கும் வண்ண நிறங்களில் உள்ள இந்த ஸ்கர்ட்டுகளை குண்டாகவும், அகலமான இடுப்புள்ளவர்களும் அணியலாம்.
ஏசிமெட்ரிகல், ஒரு பக்கம் நீளமாகவும், மறுபக்கம் குட்டையாகவும் இருக்கும். குண்டாக இருப்பவர்கள் இதை அணியலாம் என்று சொன்ன தபசும், ஸ்கர்ட்டுக்கு ஏற்ற மேலாடையும், யார் யார் எந்த மாதிரியான ஸ்கர்ட்டுகளையும் அணிந்தால் அழகாக இருக்கும் என்று பட்டியலிட ஆரம்பித்தார்.
ஸ்கர்ட்டுகளில் நிறைய பூ மற்றும் பெரிய டிசைன்கள் இருந்தால் அதற்கு எதிர்மாறாக வெளிர்நிற மற்றும் டிசைன் இல்லாத டாப் அணியலாம். பொதுவாகவே ஸ்கர்ட்டுக்கு உடலை இறுக்கிப் பிடிக்கும் டாப் அணிவதே நல்லது.
இடுப்பு பெரிதாக உள்ளவர்கள் எலாஸ்டிக் வைத்த ஸ்கர்ட்டுகளை அணியவேண்டும். அதில் உள்ள சுருக்கங்கள் அவர்களின் இடுப்பை மேலும் பெரிதாக காட்டும்.
பிஷ் கட் அதாவது மீனின் வால் போல இருக்கும் ஸ்கர்ட்டுகளை குண்டாக இருப்பவர்கள் அணியக்கூடாது.
ஒல்லியாக இருப்பவர்கள் எது போட்டாலும் அழகாக இருக்கும். ஆனால் இவர்கள் இடுப்பை இறுக்கி பிடிக்கும் ஸ்கர்ட்களை அணியக்கூடாது. அது அவர்களை மேலும் ஒல்லியாக காட்டும் என்கிறார் தபசும்.
தினகரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக