ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

சுவிஸில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிராக ஜேர்மன் மொழி பேசும் மாநிலங்கள்

வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக சுவிட்சர்லாந்தில் இன்று நடத்தப்பட்ட பொதுஜனவாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆம் என்று 50வீதமானவர்களும் இல்லை என்று 50வீதமானவர்களும் வாக்களித்துள்ளனர்.



பிரென்ஸ் மொழி பேசும் மாநிலங்கள் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள அதேவேளை ஜேர்மன் மற்றும் இத்தாலி மொழி பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

ஜேர்மன் மொழி பேசும் பேர்ண், லுசேர்ண், ஆர்காவு, சௌபவுசன், செங்களான், கிளாரவுஸ், கிரபுண்டன், சொலத்தூண், பாசல், சுவிட்ஸ், ஒவ்வால்டன், நிக்வால்டன், ஊரி, ஆகிய மாநிலங்கள் சட்டமூலத்திற்கு ஆதரவாக ஆம் என வாக்களித்துள்ளனர்.

பிரேன்ஸ் மொழி பேசும் ஜெனவா, பிறிபேர்க், வாட், நொயன்பேர்க், யூரா, வலிஸ் ஆகிய மாநிலங்கள் சட்டமூலத்திற்கு எதிராக இல்லை என வாக்களித்துள்ளனர்.

இதேவேளை அதிக சனத்தொகையை கொண்ட சூரிச் மாநிலத்திலும் இந்த சட்டமூலத்திற்கு எதிராக 46.80வீதமான மக்கள் ஆம் என்றும் 53.20வீதமான மக்கள் இல்லை என்றும் 46.80வீதமான மக்கள் ஆம் என்றும் வாக்களித்துள்ளனர்.

8மில்லியன் சனத்தொகையை கொண்ட சுவிட்சர்லாந்தில் வருடாந்தம் 80ஆயிரம் பேர் குடியேறி வருவதாகவும், மொத்த சனத்தொகையில் 23வீதமானவர்கள் வெளிநாட்டவர்களாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல