ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார்

மாதவரம் டெலிபோன் காலனியில் கற்பழிக்க முயன்ற அக்காள் கணவர் மேத்யூவை, கல்லூரி மாணவி ஹரிப்ரியா கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோரை இழந்த ஹரிப்ரியா, தனது அக்காள் ஹேமாவின் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக அத்தான் மேத்யூவின் செக்ஸ் தொல்லையால் மிகுந்த மன உளைச்சலுடனேயே வாழ்ந்து வந்தார். நேற்று காலையில் போதையும் காமமும் தலைக்கேறிய நிலையில், மேத்யூ, வக்கிரத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.



தனது காதல் மனைவியான ஹேமாவின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி மயக்கமடைய செய்ய வைத்த மேத்யூ, பின்னர் அவரை வெளியில் தள்ளி கதவை பூட்டினார்.

இதன் பின்னர் ஹரிப்ரியா கற்பழிக்க முயன்றபோதுதான் மேத்யூ கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். தனது கற்பை காப்பாற்றிக் கொள்ள தற்காப்புக்காக கொலை செய்த ஹரிப்ரியா சட்டத்தின் முன்னால் குற்றவாளிதான். அதே நேரத்தில் அந்த சட்டமே அவரை காப்பாற்றவும் செய்துள்ளது.

மேத்யூ கொலை செய்யப்பட்டது தொடர்பாக இந்திய தண்டனை சட்டம் 302–வது சட்டப்பிரிவின் கீழ் எப்போதும் போலவே ஹரிப்ரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை சிறைக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் போலீசார் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டனர். நேற்று காலையில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி முடித்த பின்னர் ஹரிப்ரியாவிடம் எழுதி வாங்கிய போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

மாணவி ஹரிப்ரியா, தன்னை பாது காத்துக் கொள்ளவே மேத்யூவை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். இந்திய தண்டனை சட்டம் 100–வது பிரிவின் கீழ் 6 விதமான தற்காப்பு சம்பவங்களில் எதிராளியிடம் இருந்து காத்துக் கொள்ள, பாதிக்கப்படும் நபர் ஆயுதத்தை தூக்கினால் தப்பில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கற்பழிப்பு முயற்சியின் போது, பெண் ஒருவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள, என்ன வேண்டுமானாலும், செய்யலாம் என்பதே அதன் அர்த்தமாகும்.

எனவே இன்று காலை வரையிலும் மாணவி ஹரிப்ரியாவை நாங்கள் சிறைக்கு அனுப்பவில்லை. தற்போது அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சாதாரண சட்டப்பிரிவின் கீழ் அதனை மாற்றலாமா? என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம்.

ஹரிப்ரியாவை ‘‘சிறைக்கு அனுப்பாமல், இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறோம்.’’

இந்த விவகாரத்தை பொறுத்தவரை மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் யாரும் ஹரிப்ரியாவுக்கு எதிராக செயல்படாமல் இருந்தாலே போதும். அதுவே அப்பெண்ணுக்கு செய்யும் பெரிய புண்ணியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மேற்பார்வையில் வடசென்னை இணை கமிஷனர் ஸ்ரீதர், மாதவரம் துணை கமிஷனர் விமலா, உதவி கமிஷனர் சங்கரலிங்கம், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள்.

மாலைமலர் 01.02.2014
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல