வியாழன், 6 பிப்ரவரி, 2014

சினிமாவில் என்னென்ன காட்சிக்கு என்னென்ன அர்த்தம்னு பாப்போமா?

1 .கிராமத்துல இருக்கிற ஹீரோ ஏதாவது பிரச்னை பண்ணி அவரோட குடும்பத்துல உள்ளவங்க அழுதா, அடுத்த சீன்ல அவர் சென்னைக்குப் போகப் போறார்னு அர்த்தம்.



2. ஹீரோவுக்கு ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி, லவ், வில்லன் இதுல எந்தப் பிரச்னையும் இல்லேன்னா, செகண்ட் ஹாஃப்ல அவர் சைக்கோ ஆகப் போறார்னு அர்த்தம்.

3. லவ் பண்ற பெண்ணைத் தேடி ஹீரோ போனா, படத்தில் நிறைய இங்கிலீஷ் வசனம் இருக்கும்னு அர்த்தம்.

4. ஒருத்தர் தூங்கும்போது அவங்களுக்கு இன்னொருத்தர் போர்வை போத்திவிட்டாலோ, கொசுவர்த்தி கொளுத்திவெச்சாலோ, அவங்க தூங்கறவங்க மேல ரொம்பப் பாசமா இருக்காங்கனு அர்த்தம்.

5. கல்யாணம் ஆன பொண்ணு திடீர்னு மயங்கி விழுந்தா, அவங்க கையில யாராவது நாடி பிடிச்சுப் பார்த்திட்டு, 'பயப்பட வேண்டாம்... எல்லாம் நல்ல விஷயம்தான்’னு சொல்லப் போறாங்கனு அர்த்தம்.

6. போலீஸ் ஹீரோவுக்கு, வில்லனுங்க ரொம்ப டார்ச்சர் தந்தா, ஹீரோயினோ இல்லை யாராவது ஒருத்தங்க உசுப்பேத்துற வசனமா ஒப்பிக்கப் போறாங்கனு அர்த்தம்.

7. ஒரு பொண்ணு ஹீரோவைக் கழட்டிவிட்டா, ஒரு ஒயின் ஷாப், பொண்ணுங்களைத் திட்டி ஒரு பாட்டு ரெடி பண்ணி டான்ஸர்ஸ் ரெடியா இருக்காங்கனு அர்த்தம்.

8. ஹீரோ வேலைக்கே போகாத வெட்டிப்பையனா இருந்தா, அவனுக்கு நாலு ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்கனு அர்த்தம்.

9. நைட் டைம்ல ஹீரோவும் ஹீரோயினும் போற பைக் பிரேக் டவுன் ஆச்சுனா, அப்போ கண்டிப்பா மழை பெய்யும். அதுக்கப்புறம் அது நடக்கும்னு அர்த்தம்.

10.ரௌடிங்க எவனாவது அராஜகம் பண்ணா, பஞ்ச் பேசுற ஒரு ஹீரோ அவங்களோட சண்டை போடுவார்னு அர்த்தம்.

Facebook
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல