வியாழன், 6 பிப்ரவரி, 2014

அனீமியாவில் துடிக்கும் மகள்.. காப்பாற்றப் போராடும் பெற்றோர்.!

அனீமியாவால் துடிக்கும் மகளைக் காப்பாற்ற வழி தெரியாமல் அவரது பெற்றோர் தவித்து வருகின்றனர்.

திருநெல்வேலி சி.என் கிராமத்தில் வசித்து வருபவர் கூலிதொழிலாளி முருகன் இராஜேஸ்வரி தம்பதியினரின் மகள் இசக்கியம்மாள் மீனாட்சிபுரம் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.



ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இந்த மாணவி வினோதமான அனீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே சிறுமியின் பெற்றோர்கள் மாதம் ஒரு முறை ரத்தம் ஏற்றி வருகின்றனர். அனீமியாவில் துடிக்கும் மகள்.. காப்பாற்றப் போராடும் பெற்றோர்.!

இந்த நோய்க்கு நிரந்தர தீர்வு காண வேலூர் மருத்துவமனையில் ரூ.14 லட்சம் செலவில் எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை பிப்ரவரி 11 தேதிக்குள் கட்டினால் தான் 12.ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெறும்.

இந்த அறுவை சிகிச்சைக்கான தொகையை வறுமையிலிருக்கும் சிறுமியின் பெற்றோர்கள் நெல்லையை சார்ந்த தொண்டு உள்ளங்களின் உதவியால் திரட்டி வருகின்றனர். அண்மையில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார்.

அதுபோலவே பாளை ரோஸ்மேரி பள்ளி மாணவ.மாணவிகளின் ஒன்றிணைந்த முயற்சியால் ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பூஜ்ஜியம் அறக்கட்டளை ரூ.55 ஆயிரம் வழங்கியுள்ளது. அரிமா சங்கம் ரூ.60 ஆயிரம் வழங்கியுள்ளது. சுழற்கழகம் போன்ற பல்வேறு உதவிக்கரங்களால் இதுவரை சிறுமியின் பெற்றோர்கள் ரூ.10 லட்சம் திரட்டி உள்ளனர். அனீமியாவில் துடிக்கும் மகள்.. காப்பாற்றப் போராடும் பெற்றோர்.!

எஞ்சிய ரூ.4 லட்சத்திற்கு தமிழக முதல்வரின் உதவியை எதிர்நோக்கி உள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கான நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. முதல்வரின் உதவித்தொகை உரிய நேரத்தில் கிடைக்கா விட்டால் என்ன செய்வது என பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே அவர்கள் மீண்டும் உதவும் கரங்களை எதிர்பார்த்து அவசர கதியிலான உதவியை எதிர்நோக்குகின்றனர்.


உங்களால் முடிந்த உதவியை உடனடியாக செய்யுங்கள்.

விவரம்

வங்கி கணக்கு எண்: 057001000016167

வங்கி: Indian Overseas Bank, Tirunelveli Junction.

மருத்துவமனை விவரம்: N. Esakkiammal, (CMCH No. 731983C) Dept. of Haematology, Christian Medical College, PB. No.3, IDA SCUDDER Road, Vellore - 632004.

மேலும் விவரங்களுக்கு: M. Rajeswari, (சிறுமியின் தாயார்) +(91)9788239318 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

அறுவை சிகிச்சையின் போது பத்து குருதிக்கொடையாளிகளும் தேவைப்படுகிறார்கள் என்றும் அதற்கும் இந்த மாணவியின் குடும்பத்தினர் நல்ல உள்ளங்களை தேடுகிறார்கள்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல