புதன், 12 பிப்ரவரி, 2014

அதிபர் ஒபாமாவுக்கும், பாப் பாடகி பியான்ஸேவுக்கும் தொடர்பு!

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கும் பிரபல அமெரிக்க பாப் பாடகியான பியான்ஸே நோலஸுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு பிற பெண்களுடன் தொடர்பு இருப்பதால் அவரை மிஷல் விவாகரத்து செய்யப் போகிறார் என்று கடந்த ஆண்டு இறுதியில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.



இந்நிலையில் ஒபாமாவுக்கும், பிரபல அமெரிக்க பாப் பாடகியான பியான்ஸே நோலஸுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பிரான்ஸைச் சேர்ந்த புகைப்பட பத்திரிக்கையாளர் தெரிவித்ததையடுத்து வதந்திகள் பரவி வருகிறது.

ஒபாமா, பியான்ஸே விவகாரம் குறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிடப்போவதாக அவர் தெரிவித்தார். ஆனால் வாஷிங்டன் போஸ்ட்டோ தாங்கள் அப்படி எந்த செய்தியையும் வெளியிடப்போவதில்லை என்றும், அந்த தகவல் பொய் என்றும் தெரிவித்துள்ளது.

ஒபாமா வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் பியான்ஸேவும், அவரது கணவரும் நிச்சயம் அழைக்கப்படுவார்கள். அண்மையில் நடந்த ஒபாமாவின் திருமண நாள் நிகழ்ச்சியில் கூட பியான்ஸே கலந்து கொண்டு பாட்டு பாடினார். பிரான்ஸ் அதிபர் ஹாலண்ட் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை கண்டுபிடித்த அதே புகைப்பட பத்திரிக்கையாளர் தான் ஒபாமா மிஷலுக்கு துரோகம் செய்வதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல