இந்திய தொழிலதிபரை படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு, மரண தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டு, சார்ஜா மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளார் இலங்கை இளைஞன் ஒருவர்.
இளைஞனின் விடுதலைக்காக இவரின் வறிய பெற்றோர் கொல்லப்பட்ட இந்தியருடைய குடும்பத்தின் கருணையை கோருகின்றனர்.
01 மில்லியன் டிர்ஹாமை இரத்தப் பணமாக கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு கொடுக்கின்ற பட்சத்திலேயே இளைஞன் மரண தண்டனையில் இருந்து தப்ப முடியும்.
இந்நிலையில் இரத்தப் பணத் தொகையை குறைக்கவாவது வேண்டும் என்று இளைஞனின் குடும்பத்தினர் இரக்கின்றனர். ஆனால் இந்திய தொழிலதிபரின் குடும்பம் இப்போது எங்கே உள்ளது? என்பது இவர்களுக்கு தெரியாது உள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சை அணுகி உள்ளனர்.
இளைஞனின் சொந்த இடம் மதவாச்சி. திருமணம் ஆனவர். ஒரு குழந்தையின் தந்தை. மனைவியையும் வேலைக்கு டுபாய்க்கு கொண்டு வந்து இருந்தார்.
இந்தியருடைய நிறுவனத்தில் இளைஞன் வேலை செய்தார். நிறுவனம் மூடப்பட்டபோது சம்பள விடயத்தில் ஏற்பட்ட தகராறே 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் படுகொலையில் முடிந்தது.
இவரும், மனைவியும் மறுநாள் இலங்கைக்கு தப்பி வர முயன்றபோது பொலிஸாரால் பிடிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக