வியாழன், 27 மார்ச், 2014

புலித் தலைவர் கோபிக்கு ஆதரவான இளைஞர் நால்வர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படுகின்ற கோபியை கண்டு பிடிக்க பொதுமக்கள் உதவி செய்ய வேண்டும் என்று கோரி பொலிஸாரால் பொது இடங்களில் இடப்பட்ட சுவரொட்டிகளை அகற்றியமைக்காக முல்லைத்தீவில் 04 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.



கோபியையும், கோபியின் சகாவையும் பிடிக்க உதவி கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, தேடுதல் வேட்டைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை இவர்கள் சுவரொட்டிகளை அகற்றி உள்ளனர்.

இவர்களின் பெயர்கள் வருமாறு:-

அகஸ்ரின் சலுஜன் - வயது 24

இராசேந்திரம் கமலதாஸ் - வயது 19

சுரேஸன் - வயது 25

நஜீதரன் - வயது 25

ஒட்டிசுட்டான் பொலிஸார் இவர்களை பிடித்தனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல