வெள்ளி, 28 மார்ச், 2014

மலேசிய விமானம்: இப்போதுதான் ‘திடீரென’ கிடைத்ததாம், ஒரு புதிய ‘தலைகீழ்’ தகவல்!

மலேசிய விமானத்தை தேடும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விமானங்கள் திசைதிருப்பப்பட்டன என சிறிது நேரத்துக்குமுன் BRIEF NEWS வெளியிட்டிருந்தோம். இதற்கு காரணம், தற்போது கிடைத்துள்ள புதிய தரவுதான்.



கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட விமானம் சரியான பாதையில் சென்று மலேசியாவுக்கும், வியட்நாமுக்கும் இடையிலுள்ள வான் பாதையின் நடுப் பகுதியில் வைத்து திசை திருப்பப்பட்டது அல்லவா? அந்த இடத்தில் இருந்து, மலாக்கா கடல் பகுதி வரை அந்த விமானம் பறந்தபோது, அதன் பதிவு ஒன்று மலாக்கா கடல் பகுதியில் உள்ள மலேசிய ராணுவ தளம் ஒன்றின் ராடாரில் பதிவாகியது என்பதை விறுவிறுப்பு.காமில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

அந்த பதிவையும், விமானம் திசை திரும்பியபோது கிடைத்த பதிவையும் வைத்து, ஒரு கணிப்பீடு செய்தார்கள்.

விமானம் திசை திரும்பியபோது இருந்த நேரத்தையும், அது மலாகா கடல் பகுதியில் ராணுவ ராடாரில் பதிவானபோது இருந்த நேரத்தையும், இந்த இரு பாயின்ட்டுகளுக்கு இடைப்பட்ட தூரத்தையும் வைத்து கணிப்பீடு செய்யப்பட்டது.

அதில், தென் சீனக் கடலுக்கும், மலாகா கடல் பகுதிக்கும் இடையே இந்த விமானம், வழமையான வேகத்தைவிட அதிக வேகத்தில் சென்றது தெரியவந்தது.

விமானம் வழமையை விட வேகமாக சென்றால், அது பயன்படுத்தும் எரிபொருளின் அளவு வழமையை விட அதிகமாகும். அப்படியானால், விமானத்தில் உள்ள எரிபொருள் சீக்கிரம் தீர்ந்து போகும்.

இந்த அடிப்படையில் கணக்கிட்டதில், கடந்த ஒரு வாரமாக தேடப்பட்டு வந்த கடல் பகுதிவரை மலேசிய விமானம் சென்றிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அந்த இடத்தை அடைவதற்கு 1,100 கி.மீ. வட-மேற்கே விமானம் வந்துகொண்டிருந்த போதே, அதில் இருந்த எரிபொருள் தீர்ந்து போயிருக்கும். இதனால், அந்த இடத்தில் விமானம் கடலில் வீழ்ந்திருக்கும் என தற்போது கருதுகிறார்கள்.

இதையடுத்தே, இன்று காலை தேடலுக்காக புறப்பட்டுச் சென்ற விமானங்களை இந்த புதிய இடத்துக்கு திசைதிருப்ப உத்தரவிட்டுள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இருந்து 2,500 கி.மீ. தென்-மேற்கே உள்ள கடல் பகுதிக்கு சென்ற தேடுதல் விமானங்களை, 1,100 கி.மீ. வட-மேற்கே போய் தேடும்படி சொல்லியிருக்கிறார்கள்.

உத்தரவையடுத்து, புதிய லொகேஷனுக்கு தேடுதல் விமானஙகள் பறந்துள்ளன.

இப்போதுதான் எமக்கு வரக்கூடாத சந்தேகமெல்லாம் வருகிறது. இதில் ஏதோ தில்லுமுல்லு உள்ளது என ஒரு பட்சி சொல்கிறது.

ஒருவேளை இந்த புதிய இடத்தில் இன்றோ, நாளையோ விமானம் வீழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டால்…. இப்போது வேண்டாம், முதலில் கண்டுபிடிக்கட்டும், அப்புறம் சொல்கிறோம்.

விறுவிறுப்பு இணையம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல