“மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை திசைதிருப்பி சென்றது அதன் பிரதான விமானிதான். இந்த திசைதிருப்பலின் முழுப் பங்கும் அவரையே சாரும்” என அமெரிக்க பத்திரிகை யு.எஸ்.ஏ. டுடே வெளியிட்ட புலனாய்வுக் கட்டுரைக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த புலனாய்வில் பங்குகொள்ளும் மலேசிய புலனாய்வாளர் ஒருவர் கூறிய தகவல்களை அடிப்படையாக வைத்தே, தமது புலனாய்வுக் கட்டுரை எழுதப்பட்டதாக யு.எஸ்.ஏ. டுடே தெரிவித்திருந்தது. “விமானத்தில் இருந்தவர்களில், விமானி ஸஹாரி ஷாதான் இதுபோன்ற சிக்கலான விமான திசைதிருப்பலை செய்யக்கூடியவர் என புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்” எனவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மலேசிய போக்குவரத்துத்துறை தற்காலிக அமைச்சர் ஹிஷாமுதீன் ஹூசேன், “விமானத்தில் இருந்த யார் மீதாவது குற்றம் நிரூபிக்கப்படும்வரை, அனைவருமே குற்றமற்றவர்கள் என்றே நாம் கருதுகிறோம். இதில் விமானிகளும் அடக்கம்” என்றார்.
யு.எஸ்.ஏ. டுடே பத்திரிகையில் வெளியான கட்டுரையில், “விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவோ, அல்லது வேறு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டதாகவோ கருதுவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. விமானத்தின் காக்பிட்டில் ஆரம்பத்தில் இருந்தே முழு கட்டுப்பாட்டையும் வைத்திருந்த கேப்டன் ஷா ஒருவரால் தான் விமானத்தை கடத்தியிருக்க முடியும்.
விமானம் திசை திரும்பியபோது உள்ளே இருந்தவர்களில், விமானம் செலுத்துவதில் மட்டுமன்றி, மிக நுட்பமாக இந்த திசை திருப்பலை செய்வதில் அனுபவம் வாய்ந்த ஒரே நபர், கேப்டன் ஷா மட்டுமே. காக்பிட்டில் இருந்த 27 வயதான கோ-பைலட் இப்படியாக திசைதிருப்பலை செய்யும் அளவுக்கு அனுபவம் வாய்ந்தவர் அல்ல என புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
சி.என்.என். வெளியிட்ட ஒரு கட்டுரையில், யு.எஸ்.ஏ. டுடே வெளியிட்டுள்ள கட்டுரை குறித்து எழுதுகையில், “விமானி ஷாவின் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பிளைட் சிமுலேட்டர் கருவியில் சந்தேகத்துக்கு இடமான எந்த பதிவும் கிடையாது. அவருக்கு அவசர பொருளாதார தேவைகள் ஏதும் இருந்ததாகவும் தெரியவில்லை. அவர்மீது குற்றம் சுமத்துவதற்கு இதுவரை எந்தவொரு சிறு ஆதாரமும் கிடைக்கவில்லை” என எழுதப்பட்டுள்ளது.
கேப்டன் ஷாவுக்கு இருந்த அரசியல் ஈடுபாட்டுக்கும், விமானம் மாயமாக மறைந்ததற்கும் இடையே தொடர்புகள் உள்ளதாக பிரிட்டிஷ் மீடியா ‘த மெயில்’ வெளியிட்ட நியூஸ் ஸ்டோரியும், மலேசிய எதிர்க்கட்சிகளால் வன்மையாக கண்டிக்கப்பட்டுள்ளது.
“சாதாரண பிரஜை ஒருவருக்கு எந்தளவு அரசியல் ஆர்வம் இருக்குமோ, அதைவிட தீவிர அரசியல் சிந்தனை ஏதும் கேப்டன் ஷாவுக்கு கிடையாது” என மலேசிய எதிர்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிம் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வேறு சில பிரிட்டிஷ் மீடியாக்கள், “மாயமான மலேசிய விமானம் புறப்படுவதற்கு சற்று முன், கேப்டன் ஷாவின் செல் போனுக்கு அடையாளம் காணப்படாத பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்” என்று வெளியிட்ட செய்திகளையும் மலேசிய போலீஸ் மறுத்துள்ளது.
“விமானம் புறப்பட்ட அன்று கேப்டன் ஷாவின் செல்போனுக்கு வந்த அனைத்து கால்களையும் செக் பண்ணிவிட்டோம். பிரிட்டிஷ் மீடியாக்களில் வெளியானதுபோல அடையாளம் காணப்படாத பெண் ஒருவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை” என்கிறது மலேசிய போலீஸ்.
விமானத்தின் பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் பதிவாகியுள்ள காக்பிட் உரையாடல்கள் தெரியவரும்வரை, இதுபோன்ற குழப்பமான ரிப்போர்ட்டுகள் ஏராளமாக வரத்தான் போகின்றன.
விறுவிறுப்பு இணையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக