ஞாயிறு, 9 மார்ச், 2014

யாழில் கூட்டு பாலியல் வல்லுறவு

யாழ்ப்பாணத்தில் 19 வயதுடைய இளம்பெண்ணொருர் கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியிலுள்ள யாக்கரை மயானத்தில், நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் தென்மராட்சி வரணி இடைக்குறிஞ்சியை சேர்ந்த இளம் பெண்ணே பாதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண், இளைஞனொருவருடன் வடமராட்சி, வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை முடித்துவிட்டு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், இருவரையும் வழிமறித்த மூன்று நபர்கள் இளைஞனைத் தாக்கிவிட்டு, யுவதியினை தூக்கிச் சென்று யாக்கரை மயானத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, மூவரும் சென்றபின்னர் குறித்த இளைஞன் நெல்லியடிப் பொலிஸாரிற்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், யுவதியினையும் இளைஞனையும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல