ஞாயிறு, 9 மார்ச், 2014

கனடா பிரதமரிடம் பெட் வைத்துத் தோற்ற ஒபாமா

பெட் வைத்துத் தோற்பதில் நீங்கள் மட்டும்தான் மோசம் என்று நினைக்காதீர்கள் . அமெரிக்க அதிபரும் இதற்கு விதி விலக்கு இல்லை போல் தெரிகிறது.



ஐஸ் ஹாக்கி போட்டியில் அமெரிக்க அணி ஜெயிக்கும் என்று கனடா பிரதமருடன் பந்தயம் கட்டி அமெரிக்க அதிபர் ஒபாமா தோற்றுவிட்டார்.

பெட் வைத்துத் தோற்ற பின்னர், அதற்காக பெட் வைத்த இரண்டு கேஸ் பீர் பாட்டில்களை திங்கட்கிழமை கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருக்கு அனுப்புகிறார் ஒபாமா.

அமெரிக்க ஆண்கள் அணி மழைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நடந்த அரை இறுதி ஆட்டத்தில் கனடா அணியால் தோற்கடிக்கப்பட்டது.

அமெரிக்கப் பெண்கள் அணியும் கனடா பெண்கள் அணியிடம் இறுதிப் போட்டிகளில் தோற்றது.

கடந்த மாதம் அமெரிக்க அதிபர், கனடிய பிரதமருடன் சந்தித்துப் பேசிய உச்சிமாநாட்டின் போது, முக்கிய பிரச்சினைகளைத் தவிர இந்த பந்தயத்தையும் கட்டினார் போலிருக்கிறது.

சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற, ஒபாமா அனுப்பும் பீர் மிகவும் விசேஷமான பீராம்.

அமெரிக்க அதிபர் அலுவலகமான, வெள்ளை மாளிகையின் தோட்டத்தில் உள்ள பூக்களில் இருந்து தருவிக்கப்பட்ட தேனைக் கொண்டு தயாரிக்கப்படும் பீர் இது என்று கூறப்படுகிறது.

ஹார்ப்பரிடம் பந்தயத்தில் தோற்பது ஒபாமாவுக்கு இது முதல் முறையல்ல.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வான்கூவர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் அமெரிக்க ஆண்கள் அணி கனடாவிடம் தோற்றுப்போனது.


BBC Tamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல