சனி, 29 மார்ச், 2014

எண்ணெய் கறைகளைப் போக்க...

எண்ணெய் பசைகள் எங்கு படிந்தாலும், அவ்வளவு எளிதில் போய்விடாது அப்படியே தங்கி, ஒருவித பிசுப்பிசுப்பை ஏற்படுத்தும். மேலும் அவை ஓர் இடத்தில் படிந்தால், அது படிந்த பொருட்களை பார்த்தால், அழுக்குள்ளது போது காணப்படும். இத்தகைய எண்ணெய் பசைக் கறைகள் நிச்சயம் அனைத்து வீடுகளிலும் இருக்கும். ஏனெனில் சமையலில் எண்ணெய் பயன்படுத்தாமல் இருக்கமாட்டோம். அவ்வாறு பயன்படுத்தும் போது, அது தெரிந்தோ, தெரியாமலோ ஆடைகள், தரைகள், சுவர் மற்றும் பல இடங்களில் படிந்து, வீட்டையும், ஆடையையும் அசிங்கமாக வெளிப்படுத்தும்.



இத்தகைய இடங்களில் படியும் எண்ணெய் பசைகளை ஒரே மாதிரியான விதத்தில் கையாண்டால், எளிதில் போக்க முடியாது. ஒவ்வொரு இடத்தில் படியும் எண்ணெய் பசையையும் ஒவ்வொரு மாதிரியான பொருட்களைப் பயன்படுத்தி, போக்க வேண்டும்.

இப்போது எண்ணெய் பசைகள் படியும் இடங்களையும், அவற்றை எளிதில் போக்குவதற்கான முறையையும் பார்ப்போமா!!!

பாத்திரங்களில் படியும் எண்ணெய் பசைகளை போக்குவதற்கு, முதலில் அதனை ஓடும் நீரில் காண்பித்து அலசி, பின் எலுமிச்சை துண்டுகளை, கோலப்பொடியில் தொட்டு தேய்த்து, பின் பாத்திரம் கழுவும் சோப்புக்களைப் பயன்படுத்தி தேய்த்து கழுவினால், எண்ணெய் பசை எளிதில் போய்விடும்.

ஆடைகளில் எண்ணெய் கறைகள் படிந்தால், அதனை உடனே நீரில் அலசாமல், டிஷ் வாஷ் நீர்மம் கொண்டு தேய்த்து, பின் சாதாரணமாக துவைப்பது போல் துவைத்தால், எண்ணெய் பசையானது நீங்கிவிடும்.

வீடுகளில் பாத்திரம் கழுவும் தொட்டிகளிலும் எண்ணெய் பசை கறைகள் படியும். எனவே அத்தகைய எண்ணெய் பசையை வினிகர், பேக்கிங் சோடா போட்டு தேய்த்து, 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், தொட்டியானது மின்னும்.

கைகளிலும் எண்ணெய் பிசுக்குகள் இருக்கும். அப்போது அதனை போக்க சர்க்கரையை வினிகரில் கலந்து, கைகளில் 2-3 நிமிடம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கைகளில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் நீங்கிவிடும்.

சமையலறை சுவர்களில் எண்ணெய் படிந்ததால் முதலில் செய்ய வேண்டியது, டிஸ்யூ பேப்பரைக் கொண்டு துடைக்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பாஞ்சில் வினிகரை ஊற்றி, எண்ணெய் பசை உள்ள இடத்தில் லேசாக டிஷ் வாஷ் பவுடரை தூவி தேய்த்து கழுவ வேண்டும்.

தரைகளில் எண்ணெய் பசைகள் இருந்தால், உயிருக்கே ஆபத்து ஏற்படும். ஆகவே வீட்டின் தரையை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். அதிலும் எண்ணெய் பசைகளைப் போக்குவதற்கு பேக்கிங் சோடா மற்றும் வினிகரை கலந்து, எண்ணெய் பசையுள்ள இடத்தில் ஊற்றி தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் மாப்பை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, துடைத்து எடுக்க வேண்டும்.

2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை, 1/2 கப் தண்ணீரில் கெட்டியாக கலந்து, அதனை எண்ணெய் பசையுள்ள கண்ணாடியில் தடவி, வெதுவெதுப்பான நீரில் ஸ்பாஞ்ச்சை நனைத்து, துடைக்க வேண்டும். இதனால் கண்ணாடி எண்ணெய் பசையின்றி மின்னும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல