சுவிசர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ் என்ற ஜேர்மன் மொழி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களாக சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் இங்கு பிறந்தவர்கள், அல்லது இலங்கையில் பிறந்து சிறுவயதில் இங்கு வந்தவர்கள். இவர்கள் தாங்கள் வாழும் சுவிஸ் நாட்டின் கலாசாரத்திற்குள்ளும், தங்களின் பெற்றோரின் கலாசாரத்திற்குள்ளும் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள் என அந்த விபரணப்படத்தில் தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோர் தங்கள் விருப்பத்தை புரிந்து கொள்வதில்லை என்றும் தங்கள் பாரம்பரிய கலாசாரத்தை பேணுமாறும் திருமண விடயத்தில் தங்கள் விரும்பங்களை விட பெற்றோரின் விருப்பம் சில வேளையில் முக்கியத்துவம் பெற்று விடுவதாகவும் அவர்கள் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டிற்குள் தமிழ் மொழியை தமிழ் கலாசாரத்தை பேண வேண்டிய நிலை, வீட்டை விட்டு வெளியில் வந்தால் வேறு ஒரு மொழி, வேறு ஒரு கலாசாரம், இந்த இரட்டை வாழ்க்கை பற்றி விபரிக்கிறது இந்த விபரணப்படம்.....
Doppelleben – Tamilische Secondos in der Schweiz

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக