பிரபலமான ரெடிடிட் இன்டர்நெட் கம்யூனிட்டி உறுப்பினர் (புனைபெயர் KBE95) ஒருவர் மலேசிய விமானத்தின் பாதுகாப்பு அறிவுறுத்தல் அட்டை (safety instruction card) ஒன்று ஆஸ்திரேலியாவில் கிடைத்ததாக இணையத்தில் வெளியிட்ட போட்டோவுக்கு ரஷ்ய மீடியாக்கள் இன்று பெரிதும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
மாயமாக மறைந்த மலேசிய விமானத்தின் பாதுகாப்பு அறிவுறுத்தல் அட்டையாக இது இருக்கலாம் எனவும், விமானம் கடலில் மூழ்கியதையடுத்து ஆஸ்திரேலிய கரைக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் எனவும் சில ரஷ்ய மீடியாக்களில் கூறப்படுகிறது. புனைபெயர் KBE95 வெளியிட்ட போட்டோவை இடதுபுறம் பார்க்கவும்.
விமானங்களில் வைக்கப்படும் பாதுகாப்பு அட்டைகள், ஒவ்வொரு மாடல் விமானத்துக்கும் வேறுபடும். அந்த விதத்தில் இது மலேசியன் ஏர்லைன்ஸ் போயிங் 777-200 விமானத்தில் இருக்கவேண்டிய கார்ட்.
மாயமான கோலாலம்பூர் – பீய்ஜிங் விமானமும் இதே போயிங் 777-200 ரக விமானம்தான்.
அத்துடன் அந்த விமானம் ஆஸ்திரேலியா அருகே கடலில் மூழ்கியிருக்கலாம் என்றுதான் தற்போது தேடுகிறார்கள்.
இந்த தரவுகளை வைத்துதான், இவர்கள் ஆஸ்திரேலியாவில் கண்டெடுத்த கார்ட், மாயமான விமானத்தில் இருந்து வந்திருக்கலாம் என்கிறார்கள்.
ரஷ்யாவின் பிரபல மீடியா ‘வாய்ஸ் ஆஃப் ரஷ்யா’ இந்த விவகாரம் பற்றி குறிப்பிடும்போது, “இதிலுள்ள சுவாரசியமான விஷயம் என்னவென்றால், மலேசியன் ஏர்லைன்ஸ், போயிங் 777-200 ரக விமானங்களை கோலாலம்பூர் – பீய்ஜிங் ரூட்டில் மட்டுமே இயக்குகிறது” என்கிறார்கள்.
இந்த தகவலை ரஷ்யர்களுக்கு யார் கொடுத்தார்கள் என தெரியவில்லை. ஆனால், தகவல் தவறு.
மலேசியன் ஏர்லைன்ஸிடம் போயிங் 777-200 ரக விமானங்கள் மொத்தம் 15 இருந்தன (தற்போது 1 மாயமாகி விட்டதால், 14).
லாங்ஹால் ஆபரேஷனில் உபயோகிக்கக்கூடிய 15 விமானங்களை வைத்திருக்கும் விமான நிறுவனம், அவற்றை ஒரேயொரு மீடியம்ஹால் ரூட்டில் (கோலாலம்பூர் – பீய்ஜிங்) உபயோகிப்பது, எந்த விமான நிறுவனத்திலும் நடக்காது.
மலேசியன் ஏர்லைன்ஸ் இந்த ரக விமானங்களை வெவ்வேறு ரூட்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை.
அவ்வளவு ஏன், கோலம்பூர் – மெல்போர்ன் (ஆஸ்திரேலியா) ரூட்டில்கூட மலேசியன் ஏர்லைன்ஸ் இதே போயிங் 777-200 ரக விமானங்களை பயன்படுத்துகிறது.
இந்த விமான பாதுகாப்பு அறிவுறுத்தல் அட்டை விவகாரத்துக்கு ரஷ்யர்கள் ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? வேறு ஏதாவது உள்ளடி வேலையா?
viruvirupu


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக