வியாழன், 3 ஏப்ரல், 2014

உடையார்கட்டு ‘இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள்’ பாரிய வெடிப்பு சம்பவம்.

முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு குரவயல் பக்கமாக காடுகளை அண்மித்துள்ள பகுதியில் நேற்று மாலை 6.42 மணியளவில் பாரிய வெடிப்புச்சத்தம் ஒன்று கேட்டதாகவும், வெடிப்புச்சத்தத்தை அடுத்து அப்பகுதியில் கரிய புகை படலங்கள் மேலெழுந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.



மக்கள் நடமாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்தே இந்த வெடிப்புச்சத்தத்தை கேட்கமுடிந்தது. வெடிப்புச்சத்தத்தின் அதிர்வுகள் பல நூறு மீற்றர்கள் வரை எதிரொலித்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெடிப்புச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் இராணுவ அம்புலன்ஸ் வண்டிகள் பெரும் சத்தமிட்டவாறு தாறுமாறாக ஓடித்திரிந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். ஆயுதக்களஞ்சியத்திலேயே இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல