வியாழன், 3 ஏப்ரல், 2014

You Tube vs Ya Tube

பிரபல காணொளி ஊடகமான யூ-டியூப் (You Tube) இணையத்தளத்திற்குப் போட்டியாக யாஹூ(Yahoo) நிறுவனமும் காணொளிக் காட்சிகளை அறிமுகப்படுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளி வருகின்றன.



சமீபத்திய நாட்களில் யூ-டியூப் இணையதளம் மூலமாக சந்தாதாரர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு யாஹூ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மரிஷா மேயர் யூ-ட்யூப்க்கு போட்டியாக யாஹூ (Yahoo) வின் புதிய காணொளிக் காட்சிகளைக் கொண்ட இணையதளத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மரிஷா மேயர் யூ-ட்யூப் நிறுவனத்தின் பெரிய சந்ததாரர்களையும், அதிகாரிகளையும் மறைமுகமாக அணுகி வருகிறார் என்றும் செய்திகள் கசிகின்றன.

மேலும் யூ-டியூப் -ஐ விட அதிகமான விளம்பர வருவாய் விகிதங்களை, சந்ததாரர்களுக்கு தர தாயராக இருப்பதாக யாஹூ அறிவித்துள்ளது.

காணொளிக் காட்சிகளை நிர்வகிக்கவும், செயல்படுத்தவும் விமியோ (Vimeo) போன்ற சில நிறுவனங்களை யாஹூ வாங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

யாஹுவின் முதற்படி ஏற்கனவே உள்ள Yahoo Screen ஆகும். அதன் இரண்டாவது படி Ya Tube வெளிவர இருக்கிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல