புதன், 9 ஏப்ரல், 2014

புலம்பெயர்ந்தவர்களுடனான போர்

ஒரு புதிய போர் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது, முன்னணி புலம் பெயர்ந்தவர்கள் குழுவுக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான போர். அரசாங்கம் வெளிநாடுகளில் இயங்கிவரும் 15 தமிழ் குழுக்களை அவர்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ உடன் தொடர்பு உள்ளதாகக் கூறி அவற்றை தடைசெய்ய முடிவெடுத்த போதுதான், இந்த போர் என்கிற சொல் ஆரம்பிக்கப்பட்டது. அந்த பட்டியலில் எல்.ரீ.ரீ.ஈ உடன் சேர்க்கப்பட்டுள்ள அந்த 15 குழுக்களினதும் சொத்துக்கள் ஸ்ரீலங்காவில் இயங்கிவரும் ஏதானும் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் அவை இப்போது முடக்கப் பட்டுள்ளன.



அந்தப் பட்டியலில் உள்ள 16 அமைப்புகளைத் தவிர, பயங்கரவாதத்துடன் உடன் தொடர்பு உள்ளதாக அரசாங்கம் கூறும் பல தனிப்பட்டவர்களின் பெயரும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. பல கட்சிகளையும் சேர்ந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட குழு ஒன்று இந்த வருடம் பெப்ரவரி மாதம், நாட்டில் நீடித்த நல்லிணக்கம் ஏற்படுவதை உறுதி செய்வதற்காக ஸ்ரீலங்கா புலம் பெயர்ந்தவர்களுடன் சம்பாஷணையை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய பின்னரும்கூட இந்த தடை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2011 முதலே புலம் பெயர்ந்தவர்கள் சமூகத்துடன் சாதகமான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதை முன்னேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ்,சிங்கள,மற்றும் முஸ்லிம் சமூகத்தவர்கள் உள்ளடங்கிய புலம் பெயர்ந்தவர்கள் தேவைப்படுமானால் இதற்கான இடைத்தரகர்களின் பங்கினை நிறைவேற்றவும் தயாராக இருந்தார்கள்.

கம்பஹா மாவட்ட ஸ்ரீ.ல.சு.க பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்கா கடந்த பெப்ரவரியில் சண்டே லீடர் பத்திரிகைக்கு, புலம்பெயர்ந்தோர இது விஷயமாக எழுப்பிய பிரச்சினைகளையும் அதற்கான பரிந்துரைகளையும் ஒரு அறிக்கை வடிவில் அரசாங்கத்திடம் இந்த பலகட்சி இளம் பாராளுமன்ற அங்கத்தவர்களைக் கொண்ட குழு கையளித்திருப்பாகவும் சொல்லியிருந்தார். இந்த பலகட்சி இளம் பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் தொடர்ச்சியான பல சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு, அங்கு பேச்சு வார்த்தைக்கான ஒரு நடவடிக்கையை ஸ்ரீலங்கா இனத்தவர்களான முதலாவது மற்றும் இரண்டாவது தலைமுறை புலம்பெயர் சமூகத்தினருடன் மேற்கொண்டிருந்தார்கள்.

ஏப்ரல் முதலாந் திகதி பாதுகாப்பு அமைச்சு, வெளியிட்ட பட்டியலில் உலகத் தமிழர் பேரவை (ஜி.ரி.எப்), பிpத்தானிய தமிழர் பேரவை (பி.ரி.எப்) மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (ரி.ஜி.ரி.ஈ) ஆகியனவும் அரசாங்கம் தடை செய்யப்பட்டதாக அறிவித்துள்ள 15 வெளிநாட்;டு அமைப்புகளில் அடங்கியிருந்தன.

வர்த்தமானி அறிவித்தல் வெள்ளிக்கிழமை அச்சானது, மற்றும் தடையின் கீழு; பாதுகாப்பு அமைச்சு கூறியருப்பது அந்த குழுக்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று. இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரூவான் வணிகசூரியா இந்த தடை, செப்டம்பர் 2011 அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஐநா பாதுகாப்புச் சபை பிரேரணை 1373 ன் கீழேயே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். புதிதாக தடை செய்யப்பட்ட 15 குழுக்களும் நாட்டின் வடக்குப் பகுதியில் தனியான ஈழ அரசாங்கத்தை உருவாக்குவதற்காக வெளிநாடுகளில் செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட அமைப்புகளில்,தமிழர் புனர்வாழ்வுக் கழகம்,தமிழர் ஒருங்கிணைப்புக் குழு,பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் இயக்கம்,கனடிய தமிழ் காங்கிரஸ்,அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலகத் தமிழர் பேரவை,கனடியத் தமிழர் தேசிய சபை,தமிழர் தேசிய சபை,தமிழ் இளையோர் அமைப்பு,உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு கழகம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்,தமிழ் ஈழ மக்கள் பேரவை, உலகத் தமிழர் நிவாரண நிதியம் மற்றும் தலைமையக குழு என்பன அடங்கும்.அந்த தடையில் செல்வாக்குள்ள தமிழ் புலம்பெயர்ந்தோர் செயற்பாட்டாளர்ளான பேரின்பநாயம் சிவபரன் என்கிற நெடியவன் அருட் தந்தை எஸ்.ஜே. இமானுவேல்,விசவநாதன் ருத்திரகுமாரன் மற்றும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

வெளிவிவகார அமைச்சு கூறுவது, இந்தக் கட்டளையானது அறிவுறுத்தும் நபர்கள் மற்றும் அமைப்புகள் என்பன, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானம் 1373ன் விதிகளின்படி பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை கட்டுப்படுத்தும் உத்திகளை அமைப்பது என்பனவற்றுக்கு இசைவாக, நியாயமான அடிப்படையில் பயங்கரவாத செயற்பாடுகளின் நடவடிக்கைகளில் பங்குபற்றுபவர்கள் அல்லது அதை தூண்டுபவர்கள், செயற்படுவர்கள் அல்லது செயற்படத் தூண்டுபவர்கள் என நம்பப்படும் நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புக்களை அடையாளங்காண தகுதி வாய்ந்த அதிகாரம் படைத்தவர் என்பதனால் பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி திணைக்கள செயலாளரின் பரிந்துரையின் பெயரில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் அவர்களால் இது கையெழுத்திடப்பட்டது என்று.

இந்த சட்ட விதிகளின்படி பிறப்பிக்கப்படும் ஒரு ஆணையின் கணிசமான விளைவு காரணமாக இதில் கூறப்பட்டுள்ள நபர்கள் அல்லது அமைப்புகளின் அனைத்து நிதி,சொத்துகள் மற்றும் பொருளாதார வளங்கள் யாவும் அந்த நபர் அல்லது அமைப்பு நியமிக்கப்பட்ட தடைப் பட்டியலில் இருந்து அகற்றப்படும்வரை முடக்கப்பட்டிருக்கும். தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி முடக்கப்பட்ட சொத்துக்களை நகர்த்துவது, மாற்றுவது அல்லது கையாள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டங்களில் கூறப்பட்டுள்ளதின்படி, எந்த நபராவது முடக்கப்பட்ட சொத்துக்களின் கட்டளைகளுக்கு அமைய நடக்கத் தவறுவாராயின் பாரிய தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.

இந்த குழுக்களில் அநேகமானவைகளது பாரிய நிதியுதவினால் ஐநா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு பின்துணை வழங்கும்படி வெளிநாட்டு அரசாங்கங்களை இணங்கச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்துக்குப் பின்புதான் இந்த தடை நடவடிக்கை வந்துள்ளது. ஐநா மனித உரிமைச் சபையினால் ஸ்ரீலங்காவில் ஒரு சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு தூண்டும் தீhமானம் பின்பற்றப் பட்டதுடன் அதை தமிழ் புலம்பெயர் அமைப்புகள் வரவேற்றிருந்தன.

இதற்கிடையில்;, 30 வருட யுத்தம் மே 2009ல் கிளர்ச்சியாளர்களை தோற்கடித்து முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர்,எல்.ரீ.ரீ.ஈ வடக்கில் மீள் குழுவாக மீண்டும் ஒன்று சேருகிறது என்று ஜெனிவா அமர்வின்போது ஐநா மனித உரிமைச் சபைக்கு அரசாங்கத்தால் அறிவிக்கப் பட்டிருந்தது. தமிழ் புலம்பெயர் அமைப்புகளை பட்டியல் இட்டிருப்பது அந்த அறிவிப்புடன்; தொடர்புள்ளது போலத் தெரிகிறது, தேசிய பாதுகாப்பின் சிறந்த நலன் கருதி இதை செய்ய வேண்டி உள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

எனினும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருக்கும் புலம்பெயர் அமைப்புகள் இந்த விடயங்களை இலகுவாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை மற்றும் சில அமைப்புகள் சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி அராய்ந்து வருகின்றன.

உலகத் தமிழர் பேரவை இது பற்றிக் கூறுகையில் உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் தலைவர் அருட் பிதா கலாநிதி எஸ்.ஜே. இமானுவேல் உட்பட 16 தமிழ் புலம்பெயர்ந்தவர் அமைப்புகளையும் மற்றும் நான்கு பிரபல தமிழ் புலம்பெயர்ந்தவர் அமைப்புகளையும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தோல்வியடைந்த எல்.ரீ.ரீ.ஈ யினது முன்னணி, என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் தடை செய்வதற்கு எடுத்துள்ள முடிவு வெட்கக்கேடானது எனத் தெரிவித்தது.

உலகத் தமிழர் பேரவையின் கொள்கை ஆலோசகரும் என்ட்பீல்ட் வடக்கு தொகுதியின் முன்னாள் பாhளுமன்ற உறுப்பினருமான ஜோன் ரயான், ஸ்ரீலங்கா வின் ஆயுத மோதல்களின் போது இழைக்கப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தற்போது நடந்து வரும் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் ஆகிய இரண்டையும் பற்றிய உண்மை ,நீதி, மற்றும் பொறுப்புக்கூறல் என்பனவற்றை கோருபவர்களை மிரட்டுவதற்கும் மற்றும் அவர்களின் வாயை அடக்குவதற்கும் மேற்கொள்ளும் அரசாங்கத்தின் அப்பட்டமான முயற்சியின் சமீபத்தைய நகர்வுதான் இது எனக் குறிப்பிட்டார்.

“மார்ச் 27ல் ஐநா மனித உரிமைப் பேரவையில் ஸ்ரீலங்கா மீதான சமீபத்தைய தீர்மானம் நிறைவேற்றப் பட்டதுக்கும் அதற்கு ஒரு சில நாட்களின் பின் இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டதும் ஒரு தற்செயல் நிகழ்வாக நிச்சயம் இருக்க முடியாது. இந்த தீர்மானம் எழுப்பப்பட்டது ஏராளமான எண்ணிக்கையிலான மனித உரிமை பற்றிய அக்கறைகளுக்கு தீர்வு காணவும் மற்றும் போரின் இறுதி வருடங்களில் இரு தரப்பினராலும் சர்வதேச விதிகளை மிறி நடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க சர்வதேச விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதற்குமே. அரசாங்கம், தீவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கின் முன்னைய மோதல் பகுதிகளில் எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர் பெறுவதை நிறுத்துவதற்hகவே இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டதாக வலியுறுத்துகிறது.

எனினும் ஆயுதப் போராட்டம் மீண்டும் வருவதை யாருமே விரும்பவில்லை, இந்தக் குற்றச்சாட்டுக்கு நம்பத்தகுந்த சான்றாக அரசாங்கத்தால் ஒரு சிறு துரும்பைத்தானும் காண்பிக்க இயலவில்லை. ஸ்ரீலங்காவின் வட மாகாணசபை முதலமைச்சர் கூறியுள்ளதைப் போல,இந்த கூற்று அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு பேயோட்டும் வேலை,மற்றும் இராணுவ பிரசன்னத்தையும் அடக்குமுறையையும் அந்த பிரதேசங்களில் தொடரும் முயற்சி” என்றும் அந்த அம்மையார் தெரிவித்தார்.

பிரதான தமிழ் புலம்பெயர்ந்தவர் அமைப்புகளுக்கு பயங்கவாதிகள் என்று முத்திரையிட்டு தடை செய்வதால் ஸ்ரீலங்கா மக்கள், தொண்டு நிறுவனங்கள்,அரசியல் கட்சிகள் என்பன இந்த அமைப்புகளுடன் தொடர்பு கொள்வதையும் அது தடை செய்கிறது என உலகத் தமிழர் பேரவை கூறுகிறது. இந்த அமைப்புகளின் பிரதிநிதிகளாக வேலை செய்பவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் இன்னும் அதிக ஆபத்தை எதிர்நோக்குவதுடன்,தமிழ் புலம்பெயர்ந்தவர் சமூக அங்கத்தவர்கள் தீவுக்கு வரும்போது அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படைகளின் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாகவும் நேரிடும்.

இந்த முடிவு கருத்துச் சுதந்திரத்தின்மீது மேற்கொள்ளப்படும் ஒரு அப்பட்டமான தாக்குதல். தீவில் நிலவிவரும் மனித உரிமைகள் நிலவரத்துக்கு மேலம் குழி பறிப்பதுடன் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்;கு மேலும் தீங்கினை ஏற்படுத்தும்.சர்வதேச சமூகத்தால் இதை சகித்துக்கொள்ள முடியாது, விசேஷமாக ஐநா மனித உரிமைகள் பேரவை இந்த விடயங்களை அக்கறை கொள்ளவேண்டிய தீவிரமான பிரச்சினைகள் என கடந்த வாரம் அதன் பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ள இந்த வேளையில். அது கோடிட்டுக் காட்டுவது தண்டனை விலக்கு கலாச்சாரம் ஏன் ஸ்ரீலங்காவில் ஒரு சவாலாக உள்ளது மற்றும் ஏன் அங்கு ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை அவசியமாக உள்ளது என்பதையே” என்று ஜோன் ரயான் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த நகர்வையிட்டு சர்வதேச சமூகமும் அதிகம் மகிழ்ச்சி அடையவில்லை, மற்றும் புலம்பெயர்ந்தவர் சமூகத்துடனான ஈடுபாடு இந்தக் கட்டத்தில் மிகவும் முக்கியம் என அது கருதுகிறது.

கடந்த வாரம் இந்த பட்டியல் வர்த்தமானியில் பிரசுரமானதை தொடர்ந்து இந்த இயக்கங்கள் இயங்கி வரும் சில நாடுகளிடம் இதுபற்றி விளக்கமளிப்பதற்காக ஸ்ரீலங்காவில் உள்ள அந்தந்த நாடுகளின் தூதுவராலய சமூகத்தினருடன் அரசாங்கம் தொடர்பு கொள்வதுடன் அவர்களின் நிலைப்பாட்டையும் அறிய உள்ளது.

 - ஈஸ்வரன் ரட்னம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல