செவ்வாய், 27 மே, 2014

குடிக்க தடை விதித்த கணவன்... மனமுடைந்த 24 வயது மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை: சென்னையில், மது அருந்தக் கூடாது எனக் கணவன் தடை விதித்ததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த கார் டிரைவர் வேளாங்கண்ணி (27). இவரது மனைவி ஜான்சி ராணி (24). இவர்களுக்கு ஏழு மற்றும் மூன்று வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மதுவின் ருசிக்கு அடிமையானார் ஜான்சி. இதனால் குடும்ப பொறுப்புகளை மறந்து எப்போதும் மது போதையிலேயே இருக்க விரும்பியுள்ளார்.

மனைவியை திருத்த நினைத்த வேளாங்கண்ணி, குழந்தைகள் இருவரையும் ஜான்சியின் தங்கை ஜாஸ்மின் பொறுப்பில் விட்டு வளர்க்கச் சொல்லி இருக்கிறார். மேலும், மனைவியைக் குடிக்கக் கூடாது என வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால், கணவரின் அறிவுரையை மதிக்காத ஜான்சி வருமானம் முழுவதையும் மதுவிற்கே செலவழித்துள்ளார். இதனால் குடும்பம் சாப்பாட்டிற்கே கஷ்டப் பட்டுள்ளது. பின்னர் குடும்பத்தினரின் அறிவுரையின் படி மனைவியை மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளார் வேளாங்கண்ணி.

ஆனால், இதற்கு உடன்படாத ஜான்சி கணவர் இல்லாத நேரத்தில் நேற்று தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இரவு வீடு திரும்பிய வேளாங்கண்ணி மனைவி தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜான்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜான்சியின் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுப்பழக்கத்தைக் கைவிட முடியாததால் இரு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. Thatstamil


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல