திங்கள், 19 மே, 2014

புலிகளுக்கு சாபம் போடும் அனந்தி!

சரணடைந்து காணாமல் போன உறவுகள் எல்லோரும் மீண்டும் வர வேண்டும் என்றும் போரிலே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் நல்லூரில் பிரார்த்தித்ததாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.



இவர் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டார். இங்கு வரவழைக்கப்பட்டு இருந்த ஊடகவியலாளர்களுக்கு பின்பு கருத்து தெரிவித்தார்.

இவர் தெரிவித்தவை:-

“ 2009 ஆம் ஆண்டில் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்து காணாமல் போன உறவுகள் அனைத்தும் மீண்டும் வர வேண்டும் என்ற நோக்கத்தோடும் நாங்கள் எவ்வளவு துன்பப்பட்டு சிதறுண்டு அதில் மரணித்தோமோ அதே போல அதற்கு காரணமானவர்களும் அவ்வாறு சிதறி போக வேண்டும் என்று பிரார்த்திப்பதற்காகவே கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டோம்.

காணாமற்போன உறவுகள் மீண்டும் வரவேண்டும்: அனந்தி
இந்த நாள்தான் எங்கள் அந்த வாழ்கையை தொலைத்த நாள். அன்றைய தினம் சுமார் 8.00 மணியளவில் என்னுடைய கணவரை முல்லைத்தீவு இராணுவத்தினரிடம் நான் கையளித்திருந்தேன்.

ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் என்னுடைய கணவர் எங்கே இருக்கின்றார்? என்றுகூட தெரியாமல் அவர் உயிரோடு இருக்கின்றாரா? இல்லையா? என்ற நிலைமையில் தேடிக் கொண்டு இருக்கின்றேன்.

நான் தொடர்ந்து மூன்று வருடங்களாக இவ்வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றேன். முதலில் கிளிநொச்சி மாவட்டத்தில் வழிபாட்டில் ஈடுபட்டேன். அடுத்து முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தேன். இன்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு செய்தேன்.

இந்த நாடு இறைமை உள்ள நாடு, ஜனநாயகம் நிலவுகின்ற நாடு என சர்வதேசத்துக்கு காட்டிக் கொண்டு இருக்கின்ற அதேவேளை இங்கே கண்ணீருடன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

thainaadu
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல