திங்கள், 19 மே, 2014

பிரபாகரனை சர்வாதிகாரி எனும் உண்மையை கூறிய விக்கியை காப்பாற்றிய சுமந்திரன் எம்.பி.

கந்த 01.05.2014 அன்று சாவ கச்சேரியில் நடைபெற்ற கூட்ட மைப்பின் மே தினக் கூட்டத்தில் புலிகளின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என்று உண் மையை உரைத்த வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக் னேஸ்வரன் பேசியிருந்த மறுநாளே அவர் மாரடைப்பால் வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதும் யாவரும் அறிந்ததே.



பிரபாகரனை சர்வாதிகாரி என்ற உண்மையை உரைத்த விக்னேஸ்வரனுக்கு தாயகத் திலும், தமிழகத்திலும், புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களிலிருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பின.

கூடவே தமிழ் தேசிய ஊடகங்களும் கொதித்தெழுந்து விக்னேஸ்வரனை வன்மையாகக் கண்டித்த தோடு, அவரின் தொலை பேசி, பக்ஸ், மின்னஞ்சல் தொடர்பு முகவரிகளையும் எல்லோரது பார்வைக்காகவும் பதிவேற்றி, நியாயம் கேளுங்கள். விசாரணை செய்யுங்கள், கேள்வி எழுப்புங்கள் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தின.

உள்நாட்டிலிருந்தும். வெளிநாடுகளிருந்தும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த தொலைபேசி அழைப்புக்கள், பக்ஸ் மடல்கள், மின்னஞ்சல்களால் விக்கியின் முதலமைச்சர் அலுவலகம் அமளி துமளியானது.

தொடர் தொலைபேசி அழைப்புகள். பக்ஸ் மடல்களால் ஆடிப்போன முதலமைச்சர் பதறி விழுந்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு விடயத்தை கூற அதற்கு சுமந்திரன் ‘நீங்க பேசாம ஆஸ்பத்திரியில் போய் படுத்துறுங்கோ’, எல்லாம் சரியாகிடும் என்று கூற, சுமந்திரனின் ஆலோசனைப்படி விக்கி அவசர அவசரமாக ஓடிப்போய் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டார்.

(விக்கி காலிலுள்ள கட்டிக்காகவே சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்பதை யாழ்ப்பாண வைத்தியசாலை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன)

உண்மையில் அங்கு தனது கலிலுள்ள உபாதைக்கு (கட்டிக்கு) சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் திடீர் மாரடைப்பால் விக்னேஸ்வரன் வைத்தியசாலையில் அனுமதி என்று ஊடகங்களுக்கு வதந்தி சேய்தியை பரப்பச் செய்தார்.

ஜனாதிபதி பொது வேட்பாளர் என்ற கதையும் இதற்காகத்தானாம்?

ஆனாலும் தனது உடல் நலம் பற்றிய நல விசாரிப்புகளோ, அனுதாபங்களோ தெரிவிக்கப்படாமல் தொடர்ந்தும் வந்து கொண்டிருந்த எதிர்ப்புகள், கண்டிப்புகள்., விமர்சனங்களால் நிலைகுலைந்து போன விக்னேஸ்வரன், சுமந்திரனிடம் மீண்டும் எடுத்துரைக்க பிரபாகரனை சர்வாதிகாரி என்று விமர்சித்த பிரச்சினையிலிருந்து எல்லோருடைய கவனத்தையும் உடனடியா கவே திசை திருப்பும் முயற்சியில் வரி ந்து கட்டிக்கொண்டு இறங்கிய சுமந்திரன்.

ஜனாதிபதி தேர்லில் விக்னேஸ்வரன் பொதுவேட்பாளர் என்று கதையைக் காட்டினார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதுவும் எடுபடாமல் பிசுபிசுத்து போயி ருக்கிறது.

நன்கு திட்டமிட்டு எழுதி, வரிக்கு வரி சரி பார்த்து தான் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கொண்டு வந்து விக்னேஸ்வரன் வாசிக்கும் அறிக்கைகளின் இறுதி ஒப்புநோக்குனராக இருந்து வரும் முதலமைச்சருக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்விடயத்தை வேண்டுமென்றே விட்டு வைத்ததாகவும் இப்போது தெரிவிக் கப்படுகிறது.

nadunadapu

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல