திங்கள், 19 மே, 2014

காகம் திட்டி மாடு சாவதில்லை

அரசாங்கத்தில இருக்கிறதா – போறதா? எண்டு ஒரு போடு போட்டிருக்கிறார் விமல் வீரவன்ச.

பங்காளிக்கட்சிகளுக்குள் குத்து வெட்டு எண்ட மாதிரி ஒரு இங்கிலிஷ் பேப்பரில செய்தியும் கார்ட்டூனும் வந்திருந்திது.



பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வாங்கோ. தெரிவுக்குழு மூலமாக தீர்வுத்திட்டத்தை நேர்மையாக வைச்சு, இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வை அரசாங்கம் முன்வைக்கேல்லை எண்டால், அரசாங்கத்தில இருக்கிறதைப் பற்றி – அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிறதைப்பற்றிப் பரிசீலிப்பேன் எண்டிருக்கிறார் டக்ளஸ் தேவானந்தா.

இப்பிடிக் கொஞ்சம் கொதிக்கத் தொடங்கியிருக்கு அரசாங்கத்துக்குள்ள.

ஆனால், என்னதான் கொதிச்சாலும் இப்போதைக்கு ராஜபக்ஷ கொம்பனியை ஆரேலும் லேசில விழுத்தேலாது எண்டதும் உண்மை

அந்த அளவுக்கு ராஜபக்ஷ கொம்பனியைக் கவனமாகக் காப்பாத்திக்கொண்டிருக்கினம் சிங்க ராசதந்திரிகளும் பொலிஸி மேக்கேர்ஸ்களும் - அதாவது கொழும்பின்ரை திங்ராங்ஸ்களும்.

இதைத்தான் சொல்லிறது என்னதான் உள்ளுக்குள்ள குத்துப்பட்டாலும் அவங்கள் அவங்கள்தான் எண்டு.

இப்ப அமெரிக்காக்காரன் வந்து கொழும்பின்ரை கழுத்தை நெரிக்கட்டும். விமல் என்ன சொல்லிறார் எண்டு பாப்பம்? உடன சிங்கன் அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றி ஒரு முற்றுகைப்போரை நடத்தி, அமெரிக்கக் கொடியை எரிச்சு, தெருவில நிண்டு அட்டகாசம் பண்ணி, நிண்டால் நாங்கள் ஒண்டாத்தான் நிற்பம். வீழ்ந்தாலும் நாங்கள் ஒண்டாத்தான் விழுவம் எண்டமாதிரி அரசாங்கத்தின்ரை அடிப்பக்கத்தில குந்தீடுவார்.

இதுபோலத்தான், ரணிலும் சரத் பொன்சேகாவும் கூட ஒண்டாய்த் திரண்டிடுவினம்.

இதெல்லாம் ஏனெண்டால், இலங்கையை ஆரிட்டையும் விட்டுக்குடுக்க மாட்;டம் எண்ட ஒரு எண்ணத்தாலதான் வந்தது.

இலங்கையை கண்டவன் நிண்டவன் எல்லாம் தங்கட காலுக்குள்ளையும் கவட்டுக்குள்ளயும் கண்டபாட்டுக்குப் போட்டுழக்கினால்... அதின்ரை பாதிப்பு இலங்கைக்கு - இலங்கையர்களுக்குத்தான் எண்டது இவங்களுக்கு நல்லாய் விளங்கும்.

அதுதான் உண்மையும் கூட.

ஆட்டோட உள்ளதுதான் குட்டிக்கும்.

ஆனால், எங்கட (தமிழ்) ஆக்களுக்கு இதொண்டும் விளங்காது.

அவையைப்பொறுத்தவரையில அவை தாங்கள் இலங்கையரே இல்லை எண்ட மாதிரித்தான் சிந்திச்சுக் கொண்டிருக்கினம்.

அதாலதான் அவை எதுக்கெடுத்தாலும் எதிரும் புதிருமாகக் கதைச்சுக்கொண்டிருக்கிறதும் கண்டதுக்கும் எதிர்ப்புக்காட்டிக்கொண்டிருக்கிறதும்.

இதால தங்களுக்குள்ளயும் அடிபட்டு ஆளுக்கொரு போக்கு. தலைக்கொரு நியாயம் எண்டு பிச்சல், பிடுங்கலாக இருக்கினம்.

இதாலதான் இண்டு வரையிலயும் ஒரு முடிவுக்கும் ஒருதரும் வாறதுமில்லை. ஒரு தீர்மானத்தை ஒண்டா நிண்டு ஆதரிக்கிறதும் இல்லை.

வெளியாட்களைச்சந்திச்சாலும் ஒண்டா நிண்டு சந்திக்கிறதோ பேசிறதோ கிடையாது.

உள்ளுக்குள்ள - இலங்கைக்குள்ள பேசிறது, தீர்மானம் எடுக்கிறது எண்டாலும் ஒண்டா நிக்கிறதில்லை.

இதைத்தான் எல்லாரும் தங்களுக்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தமிழாக்களை வெட்டிப்பயன்படுத்திறாங்கள்.

மற்றவங்களுக்குப் போய் சேவகம் செய்யிற இந்தத் தலைவர்களெல்லாம் தங்களுக்குள்ள ஒண்டு கூடி, ஒருமித்த முடிவை எடுத்து ஒரு தீர்வை எட்டிறதுக்கு ஒரு நாளும் நினைக்கிறதில்லை.

ஆருக்கும் அடிமையாக இருக்கத்தயார். தங்களுக்குள்ள நட்பாக, அன்பாக இருக்கத் தயாரில்ல.

என்ன மாதிரியான ஒரு சனமப்பா? எப்பியான ஒரு கூட்டமப்பா நாங்கள்?

எங்களுக்கு நாட்டுப்பற்றும் கிடையாது. இனப்பற்றும் கிடையாது. ஒரு மண்ணும் கிடையாது.

மற்றவையள் தங்களுக்குள்ள அடிபட்டு, வேறுபட்டுக் குத்துப்பட்டாலும் பொறுத்த சந்தர்ப்பங்களில ஒண்டா நிற்பாங்கள்.

பாருங்கோ, இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் எண்டு அமெரிக்கக்காரன் சொன்னால் அதை எந்தச் சிங்களத்தரப்பாவது ஏற்றதா?

இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடைதான் வருது எண்டு வைச்சுக்கொள்ளுங்கோ... அதை எந்தச் சிங்களக்கட்சியாவது ஏற்றுக்கொள்ளுமோ எண்டு சொல்லுங்கோ பாப்பம்?

இதுதான் நாட்டை நேசிக்கிறது எண்டிறது. இதுதான் தேச பக்தியும் தேசிய உணர்வும் எண்டு சொல்லிறது.

இப்ப சீனா இலங்கையைத் தன்ரை பிடியுக்குள்ள கொண்டு வரப்பாக்குது... அமெரிக்காவுக்குத் தண்ணி காட்டிறதுக்காகச் சீனாவை மடியுக்குள்ள போடுறாங்களே தவிர, சீனாவின்ரை பிடியுக்குள்ள ஒரு நாளும் கொழும்பு போகாது.

ஆனால், நாங்கள்தான் அந்தா விழுகுது... இந்த சரியுது எண்டு கொழும்பு அரசியல் தலைமைகளுக்கு எப்பவும் நேர்த்தி வைச்சுக்கொண்டிருக்கிறம்...

காகம் திட்டி ஒரு நாளும் மாடு சாவதில்லை


-வடபுலத்தான்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல