திங்கள், 30 ஜூன், 2014

"14 வயது “மனைவியை” விவாகரத்து செய்து விட்டு 12 வயது சிறுமியுடன் 2ம் திருமணம்!"

Mahammadu Saidu

நைஜீரியாவில் ஏற்கனவே 14 வயதான சிறுமியை திருமணம் செய்த ஒருவர் தற்போது அவரை தள்ளிவைத்துவிட்டு 12 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவை சேர்ந்தவர் மைமூனா அப்துல்லா என்ற 14 வயது சிறுமி.

அவரை பெற்றோர் மகமது சைது என்பவருக்கு 120 டாலருக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து வைத்தனர்.

கல்யாணம் முடிந்தவுடன் சைது, மைமூனாவை வீட்டில் பூட்டி வைத்துள்ளார். மேலும், அடித்து, உதைத்து வேலை வாங்கியுள்ளார். கணவரின் கொடுமை தாங்காமல் மைமூனா தன்னுடைய தாய் வீட்டிற்கு ஓடி வந்துவிட்டார்.

இதனால், மைமூனை விவாகரத்து செய்து விட்டார் சைது. அதுமட்டுமல்லாமல் விவாகரத்து செய்ததற்கு காரணமாக மைமூனின் படிப்பை சுட்டிக் காட்டியுள்ளார் அவர்.

மைமூனாவின் தந்தை சிறுமியின் வாழ்க்கை பிரச்சினை குறித்து சமரசம் செய்ய அங்குள்ள மதத்தலைவர்களை அழைத்துள்ளார்.

உடனே, மைமமூனாவின் முன்னாள் கணவர் தான் மைமூனாவை திருமணம் செய்ய கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு உள்ளார்.ஆனால் மைமூனாவின் தந்தை அதற்கு நிலம் வாங்கி விட்டார். இதனால், சைது சமரசத்திற்கு உட்படவில்லை.

இந்நிலையில் மைமூனவை விவாகரத்து செய்துள்ள சைது தற்போது மற்றொரு 12 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வறுமையின் காரணமாக இங்கு குழந்தை திருமணங்கள் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல