திங்கள், 30 ஜூன், 2014

கடும் காற்றினால் பனைமரம் முறிந்து வீழ்ந்து வீடு சேதம்

திடீரென வீசிய கடும் காற்றினால் பனைமரம் முறிந்து வீழ்ந்ததில் வீடு ஒன்று சேதம் அடைந்தது. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் ஏழாலை தெற்கு சிவகுரு வீதியில் இடம்பெற்றது.

ஞாயிறு மாலை வீசிய கடும் காற்றினால் பனைமரம் முறிந்து வீழ்ந்ததில் வீடு சேதமடைந்தது. முற்றத்தில் யாரும் இல்லாததால் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

எட்டு மாதங்களுக்கு முன்னர் கிராம அலுவலர் ஊடாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தப் பனை மரத்தை தறிக்குமாறு கிராம அலுவலரும் பிரதேச செயலரும் காணியின் உரிமையாளரிடம் அறிவித்தும் பனை மரம் தறிக்கப்படாத நிலையில் முறிந்து வீழ்ந்துள்ளது என அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல