திங்கள், 9 ஜூன், 2014

பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முன்னாள் புலிகள்!

மானிப்பாய் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்கள் மீது யாழ்ப்பாண பெண் ஒருவர் பயங்கரவாத தாக்குதல் நடத்த உள்ளார் என்று லண்டனில் இருந்து கிடைத்த தொலைபேசி முறைப்பாடு தொடர்பாக பொலிஸ் புலனாய்வாளர்கள் உண்மையை கண்டு பிடித்து உள்ளனர்.



தொலைபேசியில் எச்சரித்தவர் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் என்றும் இப்பெண்ணை திருமணம் செய்வார் என்று பொய்யான வாக்குறுதி வழங்கி பெண்ணிடம் இருந்து மூன்றரை இலட்சம் ரூபாய் வரை மோசடி செய்து உள்ளார் என்றும் புலனாய்வில் தெரிய வந்து உள்ளது.

பெண் பருத்தித்துறையை சேர்ந்தவர். இணைய விளம்பரம் ஊடாக திருமணத்துக்கு விண்ணப்பித்து இருந்தார். வங்கிக் கணக்குக்கு ரொக்கப் பணம் அனுப்புகின்ற பட்சத்தில் பிரிட்டனுக்கு கூப்பிட்டு திருமணம் செய்வார் என்று மோசடி நபர் இனிக்க பேசி நம்ப வைத்து இருக்கின்றார்.

பணத்தை பெற்றுக் கொண்ட இந்நபரிடம் இருந்து எவ்வித சாதகமான சமிக்ஞையும் கிடைக்காததால் பணத்தை திருப்பி தரச் சொல்லி பெண் கேட்டு இருக்கின்றார்.

இந்நிலையிலேயே பொலிஸில் இப்பெண்ணை மாட்ட புலி ஆசாமி முயன்று இருக்கின்றார். இந்தியாவுக்கு தப்பி செல்ல முயன்ற இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இவர் கடந்த மே 31 ஆம் திகதி நள்ளிரவிலேயே கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு விடாது தொலைபேசித் தொடர்பு மேற்கொண்டு பயங்கரவாத தாக்குதல் குறித்த பீதியை வேண்டும் என்றே பரப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல