திங்கள், 9 ஜூன், 2014

தொடரும் அதிர்ச்சி வைத்தியம் 424 !

இலங்கை அரசாங்கத்தின் அதிர்ச்சி வைத்தியமான 424 புலம் பெயர் பயங்கரவாதிகளின் பெயர்கள் வெளியீடு உண்மையிலேயே பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியொரு துர்ப்பாக்கியமான நிலை தங்களுக்கு ஏற்படும் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்தின் இறைமைக்கு எதிராக வெளிநாடுகளிலிருந்து செயற்பட்டுக்கொண்டு அவ்வப்போது இலங்கை சென்று தங்கள் சௌகரியங்கள அனுபவித்துக்கொண்டு வந்தவர்கள் அரசாங்கம் தடை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் வெளியிட்டதும் அதிர்ந்து போய்விட்டார்கள்.

அதன் தாக்கம்தான் தாங்களும் அரசாங்கத்தை தடை செய்வதாக இலங்கைத் தலைவர்களின் பெயர்களையும்.இராணுவ அதிகாரிகளின் பெயர்களையும் நாடு கவுண்ட அரசாங்கமும்,தமிழர் பேரவையும் வெளியிட்டுள்ளன.

தாங்கள் எவ்வளவெல்லாம் செய்திருக்கிறோம் தங்கள் பெயர் வரவில்லையே பலருக்கு ஆச்சரியமாம்.ஐரோப்பாவில் உள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவைச் அதிகாரி ஒருவருடன் தமிழர்கள் தொடர்புகொண்டு புலிகளின் செயற்பாட்டாளர்கள் பலரது பெயர்கள் வரவில்லையே என்று கேட்டபோது, ஒன்றும் யோசிக்க வேண்டாம்.

இலங்கை அரசாங்கம் இப்போது வெளியிட்டது பழைய பட்டியல்தான். மிகுதி நூற்றுக்கணக்கானவர்களீன் பெயர்ப் பட்டியல் இருக்கிறது. என்று ஒருசில பெயர்கள் வாசித்துக் காட்டப்பட்டதாம்.

அதில வெளிநாடுகள் இயங்கும் வானொலிகளில் இலங்கையின் இறைமைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் பலரது பெயர்கள் அடங்கியுள்ளதாம். இன்னும் பலரது பெயர்கள் விபரங்கள் தமிழர்களால் தொடர்ந்தும் ஆதாரங்களுடன் வழங்கப்பட்டு வருகிறதாம். எல்லோரின் பெயர்களையும் வெளியிடாத காரணம் இலங்கை விமான நிலையத்தில் வைத்து அவர்கள் வரவேற்கப்படுவதற்காகவாம்.

வெளிநாடுகளில் இலங்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோர் படங்கள் இணையதளங்கள்மூலம் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. விரல் அடையாளம்போல புகைப்படங்கள் அடையாளம் கண்டுபிடிக்கும் மென்பொருள்( Software) வசதிகள் இலங்கை புலனாய்வுப் பிரிவிடம் உள்ளதாம்.

இப்படிப் பெயர் குறிப்பிடாத ஒருவர் சலசலப்புற்குத் தெரிவித்தார்.

புலம் பெயர்ந்தவர்கள் பலர் தங்கள் இலங்கைப் பயணத்தை ரத்துச் செய்து விட்டதாக புலிகளின் இணையதளமான லங்காசிறி தெரிவித்துள்ளது. முதுகில் புண் உள்ளவன்தானே காடு நுழையப் பயப்படுவான். புலிகள் வன்னியில் காட்டாட்சி நடத்தியபோது வெளிநாடுகள் புலிப்பினாமிகள் ஊருக்கு வா பார்த்துக்கொள்கிறோம் என்று தமிழர்களை மிரட்டினார்கள். பிளாக்மெயில் செய்து கப்பம் வாங்கினார்கள். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பது போல புலிகள் அழிந்தபின் நிலைமை மாறி அப்படி மிரட்டியவர்களே ஊருக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புலிகள் வன்னியில் காட்டாட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் வன்னிக்கு வெளியில் உள்ள தமிழர்கள் வன்னிக்குள் செல்ல முடியாது.புலிகளிடம் விசேட அனுமதி பெற்றவர்கள் மட்டும்தான் வன்னிக்குள் செல்ல முடியும்.

அப்படிச் செல்பவர்கள் வன்னிக்குள் வசிக்கும் யாராவது பொறுப்பேற்க வேண்டும்.அல்லது புலிகளின் பினாமிகளாக இருக்க வேண்டும். மாற்றுக் கருத்தாளர்கள் புலிகலின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல வாய்ப்பே இல்லை.வெளிநாடுகளில் புலிகளுக்கு பணம் கொடுப்பவர்களாக இருந்தாலும் புலிகளின் விசேட அனுமதியின்றி வன்னிக்குள் செல்ல முடியாது. ஏ9 பாதையினூடாக பயணிப்பவர்கள் புலிகளின் சோதனைச் சாவடியான புளியங்குளத்தில் கட்டணம் செலுத்தப்பட்டு அந்தப் பாதையினூடாக யாழ்ப்பாணம் செல்ல அல்லது கொழும்பு திரும்பிவர மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்கள்.

அப்படிப் பயணம் செய்பவர்கள் புலிகளால் கண்காணிக்கப்படுவார்கள். ஆனால் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் புலிகளும் புலிகளின் பினாமிகள்,ஆதரவாளர்கள் எந்தவித கட்டணமூம் செலுத்தாமல் சுதந்திரமாக நடமாடினார்கள். புலிகள் வரி வசூலித்தார்கள். பொங்கு தமிழ் மாவீரர் விழாக்கள் கொண்டாடினார்கள்.புலிகளுக்கு எதிரானவர்கள் கொல்லப்பட்டார்கள்.

ஆனால் இன்று அரசாங்கம் வெளிநாடுகளில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இலங்கை அரசால் இலங்கைக்குள் பிரவேசிக்கத் தடை செய்யப்பட்டவர்கள் இப்போது குமுறுகிறார்கள். இலங்கை அரசின் சரியான நடவடிக்கைதன் இந்தத் தடை.

இது தொடர வேண்டும். அதுதான் இலங்கையின் இறைமைக்கு பாதுகாப்பு.

சலசலப்பு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல