புதன், 9 ஜூலை, 2014

ஒரே நேரத்தில் 3 முக்கியத் தலைவர்கள் ஒரே மருத்துவமனையில்.. தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரபல பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி என மூன்று முக்கியத் தலைவர்கள் ஒரே நேரத்தில் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அதிலும மூன்று பேருமே ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோ. ராமசாமிக்கு சமீப காலமாகவே உடல் நலம் சரியில்லை. ஏற்கனவே அவர் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது உடல் நிலை மோசமாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் வைகோவும், விஜயகாந்த்தும் அதே அப்பல்லோவில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஜயகாந்த்து நெஞ்சுவலி என்று முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் நெஞ்சு எரிச்சல் காரணமாக அவரை சேர்த்துள்ளதாக தகவல்கள் கூறின. அவருக்கு இருதய பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

அதேசமயம், மதிமுக பொதுச் செயலாளர் கடும் வயிற்று வலி காரணமாக சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரும் அப்பல்லோவில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்படி தமிழகத்தின் மூன்று முக்கியத் தலைவர்கள் ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனையில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல