புதன், 9 ஜூலை, 2014

நடிகை ஷில்பா ஷெட்டியிடம் தினமும் ரூ.50 கொடுத்து தங்கம் வாங்கலாம்

நாள் ஒன்றுக்கு ரூ. 50 செலுத்தி தங்கம் வாங்கும் திட்டத்தை பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் சேர்ந்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.



தங்கம் விற்கும் விலைக்கு ஏழைகளால் அதை கடையில் வைத்து தான் பார்க்க முடிகிறது. ஒரு குண்டுமணி தங்கம் வாங்க ஏழைகள் படாதபாடு படுகிறார்கள். இந்நிலையில் பாமர மக்களும் எளிதாக தங்கம் வாங்க நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் சேர்ந்து ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பாமர மகக்ளும் எளிதில் தங்கம் வாங்க சத்யுக் மேரா கோல்ட் திட்டத்தை ஷில்பாவும், குந்த்ராவும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த திட்டம் மூலம் ஒருவர் தினமும் ரூ.50 செலுத்தி தங்கம் வாங்கலாம். அடடே திட்டம் சூப்பராக இருக்கிறதே என்று தானே நினைக்கிறீர்கள்.

அனைவருக்கும் எளிதில் தங்கம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். கொடைக்கானலில் தினமும் ரூ.50 சம்பாதிக்கும் நபர் கூட தனது மகளின் திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார் ஷில்பா.

தற்போது நாட்டில் 7 சத்யுக் கடைகள் உள்ளன. விரைவில் இந்த எண்ணிக்கையை 50 ஆக உயர்த்த ஷில்பா திட்டமிட்டுள்ளார். அதுவும் நடப்பு நிதியாண்டிலேயே கூடுதல் கடைகளை திறக்க உள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல