வியாழன், 20 நவம்பர், 2014

மாயமான மிஸ் ஹோண்டுராஸ் அழகி சுட்டுக் கொலை!



The bodies of Miss Honduras Maria Jose Alvarado and her sister were partially buried along the banks of the Aguagual River in the town of Arada (AFP Photo/)

டெகுசிகல்பா: மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த அழகி தனது சகோதரியுடன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் இருவரது உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


மிஸ் ஹோண்டுராஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியில் வெற்றி பெற்றவர் 19 வயதான மரியா ஜோஸ் ஆல்வரடோ. இவர் லண்டனில் நடைபெறவுள்ள மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் மரியா, தனது சகோதரி சோபியா டிரினிடாடுடன் சான்டா பார்பரா பகுதியில் ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்குப் போயிருந்தார். அதன் பின்னர் இருவரையும் காணவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரையும் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், இருவரது உடல்களும் அகுஅகுயல் நதிக்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 Honduran police escort Plutarco Ruiz -- the boyfriend of Miss Honduras sister -- after he was arrested in Santa Barbara, on November 18, 2014 (AFP Photo/)
இவர்களை சோபியாவின் காதலர் புளூடர்கோ என்பவர்தான் தலையில் சுட்டுக் கொன்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. சோபியா பிறந்த நாள் பார்ட்டியின்போது வேறு ஒரு ஆணுடன் டான்ஸ் ஆடியுள்ளார். இதை புளூடர்கோ விரும்பவில்லை. வாக்குவாதம் வெடித்தது.

இதையடுத்து சோபியாவை சுட்டு விட்டார் புளூடர்கோ. இதை மரியா தடுக்க முயன்றபோது அவரையும் சுட்டு விட்டார். இருவரும் உயிரிழந்துள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல