திங்கள், 12 ஜனவரி, 2015

அரிய முக­ப்பி­ள­வுடன் பிறந்த பாகிஸ்தான் குழந்­தைக்கு அதி­ந­வீன முகச்­சீ­ர­மைப்பு அறு­வைச்­சி­கிச்சை மூலம் மறு­வாழ்வு

அரிய குறை­பா­டான இரு­பக்க முகப்­பி­ளவு மற்றும் இரு கண்­களும் பாதிக்­கப்­பட்ட 18 மாத பாகிஸ்தான் குழந்­தைக்கு வெற்­றி­க­ர­மாக சென்­னையில் உள்ள பாலாஜி பல் மற்றும் முகச்­சீ­ர­மைப்பு மருத்­து­வ­ம­னையில் மறு­வாழ்வு அளிக்­கப்­பட்­டது.




கண், கண்­ணைச்­சுற்­றி­யுள்ள எலும்­புகள் உள்­ளிட்ட முக எலும்பு சரி­வர இணை­யா­ததால் முகப்­பி­ள­வுகள் ஏற்­படும். இவ்­வ­கைக்­கு­றைப்­பாடு பெரும்­பாலும் மிக அரிது. அதா­வது இலட்­சத்தில் ஒரு குழந்தை இவ்­வகைக் குறைப்­பாட்­டினால் பாதிக்­கப்­படும். இக் குழந்­தைகள் உணவு உட்­கொள்­ளவும், மூச்சு விடவும் பேசவும், சிர­மப்­ப­டு­வார்கள். இச் சிறு­வனின் பெயர் நோமன். நோமனின் பெற்­றோர்­அர்ஷத் அலி ஒரு விவ­சாயி, திரு­மதி ரசியா ஒரு குடும்­பத்­த­லைவி.

இவர்­க­ளிடம் நோமனின் குறைப்­பாட்டை சரி செய்ய போது­மான பண வசதி இல்லை. இத்­த­கைய குறைப்­பா­டுகள் சமு­தா­யத்தில் இக்­கு­டும்­பத்­திற்கு ஒரு தாழ்வு மனப்­பான்­மை­யையும், குற்ற உணர்­வையும் ஏற்­ப­டுத்தி தந்­தது. இக் குறைப்­பாட்­டினை சரி செய்ய மருத்­து­வர்கள் தயங்­கினர். இத் தேடலில் தென் ஆசிய பசுபிக் பிராந்­திய பல் மருத்­துவ சம்­மே­ள­னத்தின் தலைவர் மற்றும் பாகிஸ்தான் பல் மருத்­துவ சங்­கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆஸிப் ஆரியனின் உத­வியை நாடினர்.

பல்­வேறு கலந்­தா­லோ­ச­னைக்­குப்­பின்னர் ,அக் குழந்­தையை சென்­னையைச் சேர்ந்த பிர­பல அறு­வை­சி­கிச்சை நிபுணர் டாக்டர். எஸ்.எம்.பாலா­ஜி­யிடம் உதவி கேட்டு பரிந்­துரை செய்தார். இந்­தி­யா­விற்கு பாகிஸ்தான் குழந்­தையை சிகிச்­சைக்­காக கொண்டு வரு­வது மிகவும் சிர­ம­மான காரியம், டாக்டர் எஸ்.எம்.பாலாஜி அதை ஒரு சவா­லாக ஏற்றுக் கொண்டு பல மட்­டங்­களில் உள்ள பிரச்­சி­னை­களை சரி செய்து அக் குழந்­தைக்கு புனர் வாழ்வு அளிக்க முடிவு செய்தார்.

டாக்டர் பாலாஜி , அச்­சி­று­வனின் நிலைக்­கண்டு மிகவும் வருத்­தப்­பட்டு,உடனே ஸ்கேன் உத­வி­யுடன் முகப்­பி­ளவு அளவின் மதிப்­பீடு மற்றும் சிறு­வனின் பிறப்­பி­லேயே உருக்­கு­ழைந்த இடது கண் மற்றும் வலது கண் பார்வை, கண் இமைகள் அதன் விளை­வாக கண்­ணைச்­சுற்­றி­யுள்ள எலும்­புகள் தன்­மை­களை ஆராய்ந்து, அறு­வைச்­சி­கிச்சை செய்ய திட்­ட­மிட்டார்.

இடது கண் பார்­வையை முற்­றி­லு­மாக இழந்த நிலையில் வலது கண்ணில் 40வீதம் பார்வை திற­னே­யி­ருந்­தது. இடது கண்ணில் செயற்கைக் கண் மற்றும் வலது கண் பார்வை மற்றும் கண் இமை­களை சரி செய்ய திட்­ட­மிட்டார். மேலும் அச்­சி­று­வனின் கண்­களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்­தது.

டாக்டர் பாலாஜி , உட­ன­டி­யாக இரு­பக்க உதடு பிளவை சீர­மைத்து கீழ் உதடு போல் மேல் உதட்­டையும் சீர­மைத்து வாய் பகு­தியை உரு­வாக்கி ,அச் சிறுவன் உணவு உட்­கொள்ள மற்றும் அவனின் முகத்­தோற்­றத்தை சரி­செய்து, மேலும் அச்­சி­று­வனின் கண்­க­ளி­லி­ருந்து கண்ணீர் வழிந்து கொண்­டே­யி­ருந்­ததை, அதி நவீன முறைப்­படி ,பாதிக்­கப்­பட்ட கண்­ணிற்கும் மூக்­கிற்கும் இடையே கண்ணீர் செல்லும் குழாய் நீக்­கப்­பட்டு புதிய குழாய் ஒன்றை பொருத்தி புதிய பாதையை உரு­வாக்கி அக்­கு­றைப்­பாட்­டினை சீர­மைத்தார்.

கூடு­த­லாக டாக்டர் பாலாஜி அச்­சி­று­வனின் வலது கண் பார்­வையை காப்­பாற்ற, பிறப்­பி­லேயே உருக்­கு­லைந்த இடது கண்ணில் செயற்கை கண் பொருத்தி, அவ­னது முகத்­தோற்­றத்தை மாற்றி , சமு­தா­யத்தில் வாழ்­வ­தற்­கான வழி­வ­குத்தார்.

இச்­செ­யல்­பாட்­டி­னால்­ அ­றுவை சிகிச்­சையின் மூலம் வலது கண்ணில் பார்­வையை மீட்டு, இடது கண்ணில் செயற்கை கண் பொருத்தி, நோமனின் முகத்­தோற்­றத்தை அழ­காக்கி உணவு உட­கொள்ள மற்றும் மூச்சு நன்றாக விடவும் ஏதுவாக சீரமைத்தார். நோமனின் முழுமையான முகத்தோற்றத்தை கண்டு அவனது பெற்றோர் மனமகிழ்ச்சியடைந்தனர். பிறந்தது முதல் குழந்தையின் முகத்தோற்றத்தைக் கண்டு வருந்திய பெற்றோர், தங்களின் குழந்தை யின் மறுகட்டமைப்பு செய்த முகத்தை கண்டு மகிழ்ந்து நன்றி தெரிவித்தனர்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல