திங்கள், 12 ஜனவரி, 2015

மணப்பெண்ணுக்கான சந்தன பேஸ் பெக்

அழ­கான தோற்­றத்தைப் பெறவும் சரு­மத்தை பள­ப­ள­வென வைத்­தி­டவும் பல வித­மான ஃபேஸ் பெக்­குகள் வந்து விட்­டன. சந்­தை­யிலும் வகை வகை­யாக ஏரா­ள­மான பொருட்கள் கிடைக்­கி­றன. ஆனால் அதில் பல்­வேறு ஃபேஸ் பேக்­கு­களில் இர­சா­யன பொருட்கள் பல கலக்­கப்­பட்­டுள்­ளன. அதனால் இயற்­கை­யான ஃபேஸ் பேக்­கு­க­ளையும் பலர் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். ஃபேஸ் பெக்­கு­களை நாம் அன்­றாடம் பயன்­ப­டுத்தி வந்­தாலும், அவை குறிப்­பாக சில நிகழ்­வு­க­ளுக்கு கண்­டிப்­பாக தேவைப்­படும். அப்­ப­டிப்­பட்ட ஒரு நிகழ்வு தான் திரு­மணம். பிறகு என்ன அலங்­காரம் இல்­லாத மணப்பெண் இருக்க முடி­யுமா என்ன? மணப்­பெண்­ணாகப் போகும் பெண்கள் தினமும் விலை உயர்ந்த அழகு நிலை­யத்­திற்கு செல்­வது கஷ்­ட­மான ஒன்று. ஆனால் அங்கே கிடைக்கும் அனைத்து பயன்­களும் வீட்­டி­லேயே கிடைத்தால் மகிழ்ச்சி தானே! உங்­களின் அனைத்து வித­மான சரும பிரச்­சி­னை­க­ளுக்கும் சந்­தனம் ஒரு சிறந்த தீர்­வாக இருக்கும்.



பல்­வேறு வழியில் பயன்­ப­டுத்­தப்­படும் சந்­தனம் எண்ணெய் சுரப்­பதை, சரும வறட்­சியை, பருக்கள் தோன்­று­வதை, கரு­வ­ளை­யங்கள் உரு­வா­வதை கட்­டுப்­ப­டுத்த உதவும். இதை விட வேறு என்ன வேண்டும்? மணப்­பெண்­ணுக்கு இருக்க வேண்­டிய ஒன்­றாக பள­ப­ளப்­பான மின்­னிடும் தோற்­றத்­தையும் கூட இது அளிக்­கி­றது. சரி, நீங்கள் முயற்­சிக்க வேண்­டிய சில சந்­தன ஃபேஸ் பெக்­கு­களைப் பற்றி இப்­போது பார்க் கலாமா?

வறட்­சிக்கு குட்பை கூறுங்கள் : உங்கள் சருமம் வறண்டு இருந்தால், சரு­மத்தில் உள்ள இயற்­கை­யான pH அளவை சம­நி­லை­யுடன் வைத்­தி­ருக்க உதவும் இந்த ஃபேஸ் பேக்கை முயற்சி செய்து பாருங்கள். 3 டீஸ்பூன் சந்­தன எண்ணெய், 3 டீஸ்பூன் பால் பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் பன்­னீரை கொண்டு மற்றும் வழு­வ­ழுப்­பான பேஸ்ட்டை தயார் செய்து கொள்­ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தின் மீது பூசிக் கொண்டு, அதை அப்­ப­டியே 15–20 நிமி­டங்கள் வரை விட்டு விடுங்கள். பின் சாதா­ரண நீரைக் கொண்டு முகத்தை கழுவிக் கொள்­ளுங்கள். சந்­தன எண்­ணெயும் பாலும் உங்கள் சரு­மத்­திற்கு ஊட்­ட­ம­ளித்து, தேவை­யான நீர்ச்­சத்தை அளிக்கும். பன்னீர் ஒரு டோன­ராக செயல்­படும். இந்த சிகிச்­சையை தினமும் பின்­பற்­றினால், நீர்ச்­சத்­துடன் கூடிய மின்னும் சரு­மத்தை பெறு­வீர்கள்.

கரு­வ­ளையம்: கூடிய சீக்­கி­ரத்தில் மணப் பெண்­ணாக போகும் பெண்­க­ளுக்கு, திரு­மண நாள் நெருங்க நெருங்க கரு­வ­ளை­யங்­களை எண்ணி தூக்­கமே போய் விடும். சந்­தனம் மற்றும் பன்­னீரை கொண்டு செய்­யப்­படும் பேஸ்ட்டை கொண்டு இதனை வீட்­டி­லேயே குணப்­ப­டுத்­தலாம். தூங்கச் செல்­வ­தற்கு முன்பு, இதனை கண்­களின் கீழ் தடவிக் கொள்­ளுங்கள். காலையில் கழுவி விடுங்கள்.

எண்ணெய் கட்­டுப்­பாடு: வறண்ட சரு­மத்­திற்கு மட்டும் சந்­தனம் தீர்வை அளிப்­ப­தில்லை. மாறாக எண்ணெய் சரு­மத்­திற்கும் அது தீர்வை அளிக்கும். அதனால் உங்கள் சரு­மத்தில் இருந்து அதி­க­மாக சுரக்கும் எண்­ணெய்யை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்றால், உங்­க­ளுக்கு சந்­தன ஃபேஸ் பேக் உள்­ளது

பருக்கள் பிரச்சினை இனி­யில்லை :பருக்­களை குணப்­ப­டுத்த இது மிகச்­சி­றந்த தீர்­வாகும். உங்­க­ளுக்கு தேவை­யா­ன­தெல்லாம் ஒரு டீஸ்பூன் சந்­த­னப்­பொடி, ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடி மற்றும் மூன்று டீஸ்பூன் பன்னீர். இதனை ஒன்­றாக சேர்த்து கலந்து வழு­வ­ழுப்­பான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து, அதனை முகத்தில் தடவிக் கொள்­ளவும்.

வெண்­மை­யாக தோன்ற... தங்­களின் சரும வகை எப்­ப­டிப்­பட்ட வகை­யாக இருந்­தாலும் சரி, வெண் மையான சரு­மத்தைப் பெற ஆசைப்­ப­டு­பவர் களுக்கு இது ஒரு சிறந்த தீர்­வாகும். வறண்ட சருமம் இருந்தால் சந்­தன எண்­ணெய்யை பயன்­ப­டுத்­துங்கள். எண்ணெய் சரு­மத்தை கொண்­டி­ருந்தால் சந்­தன பொடியை பயன்­ப­டுத்­துங்கள். ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் சந்­தன எண்­ணெய்­பொடி, ஒரு டீஸ்பூன் மஞ்சள் மற்றும் பன்­னீரை கொண்டு வழு­வ­ழுப்­பான பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்­ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அது காயும் வரை அப்­ப­டியே விட்டு விடுங்கள். 15-- – --20 நிமி­டங்கள் கழித்து முகத்தை கழுவிக் கொள்­ளுங்கள். பளிச்­சிடும் மற்றும் வெண்­மை­யான சரு­மத்தை பெற இந்த பேக்கை தொடர்ந்து பயன்­ப­டுத்­துங்கள்.

வய­தா­வதை தடுக்கும் பெக்: இந்த பேக்கை பயன்­ப­டுத்­து­வதால் திரு­மணம் முடியும் வரை மட்டும் தான் உங்கள் அழகு நீடிக்கும் என்­றில்லை. அதையும் தாண்டி உங்கள் அழகு நீடிக்கும். அதி­லுள்ள அன்­டி-­அக்­சி­டன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பி குணங்கள் உங்கள் இரத்த ஓட்­டத்தை மேம்­ப­டுத்த உதவும். மேலும் சரு­மத்தில் உள்ள நச்­சுத்­தன்­மையை நீக்கி, சுருக்­கங்­களை ஏற்­ப­டுத்தும் இயக்க உறுப்­பு­களின் உரு­வாக்­கத்தை தடுக்கும். அதனால் சீக்­கி­ரத்தில் வய­தா­வதை இது தடுக்கும். சந்­தன பொடி மற்றும் முல்­தானி மட்­டியை இரண்டு டீஸ்­பூன்கள் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சேர்த்து ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் பன்னீரை கலந்து கொள்ளவும். இதனை ஒரு மென்மையான பேஸ்ட்டாக உருவாக்குங்கள். இதனை உங்கள் முகத்தில் தடவி, காய வையுங்கள். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடுங்கள். இந்த பேக்கை வாரம் இரு முறையாவது தடவினால் இளமையான சருமத்தை பெறலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல