சனி, 31 ஜனவரி, 2015

ஏலத்துக்கு வருகிறது முகமது அலியின் கையுறை

குத்துச்சண்டை ஜம்பவான் முகமது அலி, உலகின் மிகவும் ஆபத்தான குத்துச்சண்டை வீரராக அறியப்பட்ட சோனி லிஸ்டன் ஆகியோர் மோதிய போட்டியில் அவர்கள் இருவரும் பயன்படுத்திய கையுறைகள் வரும் பெப்ரவரி 21ஆம் திகதி ஏலத்தில் வருகின்றன.



1960 ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முகமது அலி, அதே ஆண்டில் தொழில்முறைக் குத்துச்சண்டை வீரராக உருவெடுத்தார். பின்னர், களமிறங்கிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார்.

1965 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் முதல் சுற்றிலேயே ஒரே குத்தில் சோனி லிஸ்டனை முகமது அலி நாக்-அவுட் செய்தார்.

உலக குத்துச் சண்டை வரலாற்றில் மிகவும் பிரபலமான போட்டிகளில் ஒன்றாக இன்றளவும் திகழும் இப்போட்டியில் முகமது அலி, லிஸ்டன் ஆகியோர் பயன்படுத்திய கையுறைகள் வரும் பெப்ரவரி 21ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள விளையாட்டு பொருள்கள் அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல