வெள்ளி, 30 ஜனவரி, 2015

யாருக்கு தேவை எண்டோஸ்கோபி பரிசோதனை

எண்டோஸ்கோபி


கொலொனோஸ்கோபி கருவி மூலம் பரிசோதனை மட்டும் செய்யலாமா? அல்லது சிகிச்சையும் மேற்கொள்ளலாமா?

கொலொனோஸ்கோபி மூலமாக பெருங்குடலில் உள்ள கட்டியை புற்றுநோய் கட்டிதானா என்று கண்டறிய பரிசோதனைக்கு மாதிரி எடுக்க  பயன்படுகிறது. மேலும் பெருங்குடல் பகுதியில் ஏதேனும் சதைக்கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதை உடனே நீக்கவும் செய்யலாம். இது தவிர  கொலொனோஸ்கோபி மூலம் ரத்தப்போக்கு இருக்கும் பகுதியைக் கண்டுபிடித்தால் இதன் மூலமாகவே மருந்தினை உட்செலுத்தியோ அல்லது க்ளிப்  பொருத்தியோ ரத்தப்போக்கு கட்டப்படுத்தப்படுகிறது.




எப்போதாவது வாந்தி வருவது போல் உள்ளது. வருவதில்லை. அதே நேரத்தில் வாயில் அதிகளவு உமிழ்நீர் சுரக்கிறது. இது எந்த நோயின் அறிகுறி?

வயிற்றுக்குள்ளிருக்கும் அமிலம் சில சமயங்களில் அதிகமாக சுரக்கும்போது வாயில் அதிக அளவு நீர் சுரந்து குமட்டல் போல் தோன்றுகிறது.

மூலம் உள்ளவர்களுக்கு கொலொனோஸ்கோபி கருவியால் சிகிச்சை மேற்கொள்ள முடியுமா? நோயாளிக்கு அப்பகுதியில் காயம் ஏற்படுமா?

மூலம் உள்ளவர்களுக்கு கொலொனோஸ்கோபி பரிசோதனை மூலம் எந்தவித காயமும் ஏற்படாமல் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உறுதி செய்யப்பட்டு  அறுவை சிகிச்சை செய்யப்படும்.

எந்தெந்த அறிகுறி உள்ளவர்கள் எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்?

குமட்டல், வயிற்று வலி, வயிறு உப்பிப்போதல், நெஞ்சு எரிச்சல், ரத்த வாந்தி, உணவு உட்கொள்வதற்கு சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள்  உள்ளவர்களுக்கு எண்டோஸ்கோபி பரிசோதனை செய்யப்படுகிறது.

கொலொனோஸ்கோபி பரிசோதனைக்கு வயது வரம்பு உள்ளதா?

கொலொனோஸ்கோபி பரிசோதனைக்கு வயது வரம்பு இல்லை. பெருங்குடல் பகுதியில் பிரச்னை ஏதேனுமிருந்தால் எந்த வயதினரும்  கொலொனோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளலாம்.

மார்புக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட நடுப்பகுதியில் அழுத்தினால் வலிக்கிறது ஏன்?

வயிற்றில் புண் இருக்கலாம். வலதுபுறம் வலி இருந்தால் பித்தப்பையில் பிரச்னை இருக்கலாம். மருத்துவரிடம் அணுகி பரிசோதனை செய்வது  நல்லது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல