வெள்ளி, 30 ஜனவரி, 2015

முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட சீன யுவதி கால் விரல்களை பயன்படுத்தி நாவல் எழுதி சாதனை (படங்கள் இணைப்பு)

முடக்கு வாதத்தால் பாதிக்­கப்­பட்டு உடல் செய­லி­ழந்த யுவ­தி­யொ­ருவர், தனது இடது கால் விரல்­களைப் பயன்­ப­டுத்தி 60,000 சொற்­களைக் கொண்ட நாவ­லொன்றை எழுதி சாதனை படைத்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.



கிழக்கு சீனாவில் அனஹுயி மாகா­ணத்தில் பின்­தங்­கிய சமூ­க­மொன்றைச் சேர்ந்த குடும்­பத்தில் பிறந்த ஹு ஹுயி­யுவான் (21 வயது) என்ற யுவ­தியே இவ்­வாறு சாதனை படைத்­துள்ளார்.

முடக்­கு­வா­தத்தால் பாதிக்­கப்­பட்ட நிலையில் பிறந்த ஹுயி­யுவான் ஒரு சில நாட்­களே உயிர் வாழ்வார் என மருத்­து­வர்­களால் ஆரம்­பத்தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

எனினும் மருத்­து­வர்­களின் கூற்றை பொய்­யாக்கும் வகையில் ஹுயி­யுவான் உயிர் பிழைத்­துள்ளார்.

அவர் பிறந்து 10 மாதங்கள் கழித்தே அவ­ருக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்பு முடக்­கு­வாதம் என்­பதை மருத்­து­வர்கள் அறிந்­துள்­ளனர்.

முடக்­கு­வாத பாதிப்பால் அவ­ருக்கு தலை­யையும் பாதத்­தையும் தவிர உடலில் எந்த உறுப்­பையும் விரும்­பி­ய­வாறு அசைக்க முடி­யாது இருந்­தது.

இந்­நி­லையில் அவரது தந்­தை­யான பெங்கும் (49 வயது) தாயா­ரான சன்னும் (47 வயது) அவ­ருக்கு பெரிதும் அனு­ச­ர­ணை­யாக இருந்­தனர்.

சிறு­மி­யாக வளர்ந்த ஹூயி­யுவான் எதை­யா­வது சாதித்தே தீரு­வது என தீர்­மா­னித்தார்.

அவ­ருக்கு பாட­சாலை சென்று கல்வி கற்­பது சாத்­தி­ய­மற்று இருந்­ததால் தொலைக்­காட்­சியில் காண்­பிக்­கப்­படும் எழுத்­துக்­களைப் பயன்­ப­டுத்தி சுய­மாக கற்­றுக்­கொள்ள ஆரம்­பித்தார்.

அத்­துடன் கால்­களை பயன்­ப­டுத்தி அந்த எழுத்­துக்­களை எழு­தவும் கற்­றுக்­கொண்டார்.

இந்­நி­லையில் அவர் தனது முயற்சியில் வெற்றி பெற்று தனது கால் விரல்களைப் பயன்படுத்தி கணினியில் நாவலொன்றை எழுதி சாதனை படைத்துள்ளார்.




Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல