திங்கள், 2 பிப்ரவரி, 2015

பேஸ்புக்கில் ஆபாச புகைப்படம்: நடிகை தற்கொலை முயற்சி

 லாவண்யா
பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சின்னத்திரை நடிகை லாவண்யா புகார் அளித்துள்ளார்.



சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் லாவண்யா. சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து வருகிறார். ‘சோக்கு சுந்தரம்’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதுபற்றி லாவண்யா கூறியதாவது:

பேஸ்புக்கில் உள்ள ஒரு ஆபாச தளத்தில் என் புகைப்படம் ஆபாசமாக வெளியிடப்பட்டு இருந்தது. குடும்ப நண்பர் ஒருவர் இதை பார்த்து, கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி தெரிவித்தார். மனமுடைந்த நான் தற்கொலைக்கு முயன்றேன். கணவர் தடுத்து, எனக்கு ஆறுதல் கூறினார். அடுத்த நாள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தோம். 3 நாட்களில் அந்த ஆபாச பக்கம் முடக்கப்பட்டது.

இந்நிலையில், பேஸ்புக்கில் இன் னொரு ஆபாச தளத்தின் முகப்பு பக்கத்தில் என் புகைப்படம் ஆபாச மாக வெளியிடப்பட்டிருப்பதாக குடும்ப நண்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு கடந்த 29-ம் தேதி தெரிவித்தார். பிறகு, நானும் அந்த பக்கத்தை பார்த்தேன். அந்த புகைப்படத்துக்கு பல ஆபாச கமென்ட்கள், லைக்குகள் வந்துள் ளன. இதனால் மனமுடைந்து மீண்டும் தற்கொலைக்கு முயன் றேன். கணவர் தடுத்துவிட்டார். எனக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது. கணவர் நல்லவர் என்பதால், என்னை அவர் சந்தேகப்படவில்லை.

என் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட பேஸ்புக் பக்கத்தை முடக்கவேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன். இவ்வாறு லாவண்யா தெரிவித்தார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல