திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்காநல்லூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்குக்கு பக்தர்கள் இறுதிச் சடங்கு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 30 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயர் சிலை உள்ளது. அங்கு வரும் குரங்குகளுக்கு பழங்கள் மற்றும் உணவு வகைகளை பக்தர்கள் வழங்குவர்.
இந்த நிலையில், காட்டுக்காநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நேற்று காலைஒரு குரங்கு இறந்து கிடந்தது. அதனை மற்ற குரங்குகள் சோகத்துடன் பார்த்துச் சென்றன. மின் கம்பியில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து உயிர் இறந்திருக்கும் என்று கூறப்படுகிறது. குரங்கு இறந்து கிடப்பதை பார்த்த பக்தர்கள், மனித இனத்துக்கு செய்வதுபோல், இறுதிச் சடங்கு செய்ய முடிவெடுத்தனர்.
அதன்படி, தென்னங்கீற்றில் குரங்கு சடலத்தை வைத்து, மாலை அணிவித்தனர். முதியவர் ஒருவர், கையில் சட்டி எடுத்துச் செல்ல, இறுதி ஊர்வலம், தாரை தப்பட்டையுடன் நடந்தது. ஆஞ்சநேயர் சிலை அருகே பள்ளம் தோண்டி, குரங்கின் சடலத்தை அடக்கம் செய்தனர்.
The Hindu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக